விமான நிலையத்தில் பறவைகளின் தொல்லை: முறியடிக்க புது திட்டம்..!! (வீடியோ செய்தி)

Read Time:2 Minute, 40 Second

imagesபறவைகளால் விமானத்திற்கு தொடர் அச்சுறுத்தல் இருந்த வண்ணமே உள்ளது. அதை முறியடிக்கும் நோக்கில் ஜேர்மனி விமான நிலைய அதிகாரிகள் புது திட்டமொன்றை வடிவமைத்துள்ளனர்.

இதன்படி எந்திர வல்லூறுகளை வடிவமைத்து நிஜப்பறவைகளுக்கு எதிராக செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த திட்டத்தினை முதன் முதலில் ஜேர்மன் நாட்டில்அமைந்துள்ள Dusseldorf Weeze விமான நிலையத்தில் சோதனை முயற்சியாக பறக்க விடவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்த எந்திர பறவையானது நிஜப்பறவை கூட்டங்களை துரத்திச்சென்று அவைகளின் கூட்டத்தை கலைத்து விட உதவும் என நம்பப்படுகிறது.

நிஜ வல்லூறுகளின் அதே எடை மற்றும் வெளித்தோற்றத்துடன் காணப்படும் இந்த எந்திர வல்லூறுகள் பறவை கூட்டத்தை வேட்டையாட போதுமானது என அதை வடிவமைத்த வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

விமான நிலையங்களில் விமானம் தரையிறங்க மற்றும் வெளியேறும் தருணங்களில் அப்பகுதியில் வட்டமிடும் பறவைகள் கடுமையான அச்சுறுத்தலை விமானிகளுக்கு உருவாக்குவதாக கூறப்படுகிறது.

இந்த சிக்கலை நீக்கும் வகையில் உலகின் ஒட்டு மொத்த விமான நிலையங்களும் பல மில்லியன் பணத்தை செலவிட்டு வருகின்றது.

மட்டுமின்றி, பறவைகள் தந்திரசாலிகள், அவை தற்போதிருக்கும் பறவை கட்டுப்பாடு தீர்வுகளை துல்லியமாக கடந்து விடுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எந்திர பறவை திட்டத்தை நெதர்லாந்து ஆய்வாளர்கள் வெற்றிகரமாக வடிவமைத்துள்ள நிலையில் சோதனை மேற்கொள்ள அந்த நாட்டு சட்டம் இடம் தராததால், ஜேர்மனியின் Weeze விமான நிலையத்தில் சோதனையை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

இந்த திட்டம் வெற்றிகரமாக முடிந்தால் அது சாதனையாக வேகருதப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 45 நாட்களேயான சிசுவை தாக்கிய தந்தை தலைமறைவு! பொலிஸார் வலைவீச்சு..!!
Next post ஜப்பானில் 24 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு..!!