தந்தையின் கடைசி விருப்பத்தை நிறைவேற்ற மறுக்கும் மகள்..!!
சுவிட்சர்லாந்து நாட்டில் உயிரிழந்த தந்தை ஒருவரின் கடைசி விருப்பத்தை அவரது மகள் உள்பட உறவினர்கள் அனைவரும் நிறைவேற்ற மறுப்பு தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலி நாட்டை சேர்ந்த குடும்பத்தினர் சில வருடங்களுக்கு முன்னர் சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச்சில் குடியேறியுள்ளனர்.
இந்த குடும்பத் தலைவரான தந்தை வயதானவர் என்பதால், அவருக்கு எப்போது வேண்டுமானாலும் மரணம் ஏற்படலாம் என அவரே கணித்துள்ளார்.
மேலும், தான் இறந்துவிட்டால் இத்தாலியில் உள்ள சிசிலி பகுதியில் உள்ள கல்லறையில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என அவரது மகள் மற்றும் உறவினர்களுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுமட்டுமில்லாமல், சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து தன்னுடைய சடலத்தை கொண்டு செல்ல தேவையான பயணக் கட்டணம், சிசிலியில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்வதற்கான கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கான பணத்தை அவர் ஏற்கனவே கட்டியுள்ளார்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 4ம் திகதி அவர் மரணமடைந்துள்ளார்.
ஆனால், அவருடைய மகளும், உறவினர்களும் அவரது சடலத்தை சிசிலியில் அடக்கம் செய்யக் கூடாது என்றும், இங்கு சுவிட்சர்லாந்து நாட்டில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என பிடிவாதமாக உள்ளனர்.
அதாவது, மார்ச் 4-ல் உயிரிழந்த அந்த சடலத்தை இந்த நாள் முதல் அடக்கம் செய்யாமல் ஐஸ் பெட்டியில் வைத்து பாதுகாத்து வருகின்றனர்.
இத்தாலியில் உள்ள தந்தை வழி உறவினர்கள் சடலத்தை இத்தாலியில் தான் புதைக்க வேண்டும் என இப்போது சுவிஸில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
சூரிச் ஈமச்சடங்குகளை கவனிக்கும் அதிகாரி ஒருவர் நீதிமன்றத்திற்கு வந்துள்ள இந்த வழக்கு குறித்து பேசியபோது, ‘பல ஆண்டுகால எனது அனுபவத்தில் இதுபோன்ற ஒரு வழக்கை சந்திக்கவே இல்லை.
உயிரிழந்த நபர் தனது கைப்பட அவரது கடைசி விருப்பத்தை எழுதியிருந்தால், அதனை பயன்படுத்தி அவரது விருப்பத்தை நிறைவேற்றிவிடலாம்.
ஆனால், அவர் அவ்வாறு எந்த கடிதத்தையும் எழுதவில்லை. அதேசமயம், ‘இத்தாலியில் ஏன் அவரது உடல் புதைக்கப்படக்கூடாது’? என காரணத்தையும் அவருடைய மகளும் உறவினர்களும் சொல்ல மறுக்கின்றனர்.
தற்போது இந்த சடலத்தை இத்தாலியில் அடக்கம் செய்வதா அல்லது சுவிட்சர்லாந்தில் அடக்கம் செய்வதா? என்று முடிவு நீதிபதியின் தீர்ப்பில் தான் இருக்கிறது என கருத்து தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த நபரின் மகள் மற்றும் உறவினர்கள் இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த பத்திரிகைக்கும் பேட்டி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating