தனது காமப்பசிக்கு பெற்றெடுத்த மகளை இரையாக்கிய கொடூர தந்தை..!!

Read Time:1 Minute, 48 Second

The-Misconception-of-Modern-Slavery12 வயதுடைய மகளை பல்வேறு தடவை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய 52 வயதுடைய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாத்தாண்டிய – கிழக்கு வீரஹேன பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி மாரவில பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 08ல் கல்வி கற்று வருவதாக தெரிய வந்துள்ளது.

குறித்த சிறுமியின் தாய், அண்ணன் மற்றும் சகோதரி ஆகிய மூவரும் நரம்பு தளர்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தந்தையால் தான் பாலியல் நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுவதை சகோதரியிடம் பாதிக்கப்பட்ட சிறுமி கூறியுள்ளார்.

சகோதரி தாயிடம் கூறவே சம்பவம் குறித்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் ஒருநாள் தான் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்து, தொடர்ச்சியாக பல தடவைகள் தந்தையால் தான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட சிறுமி பொலிஸ் நிலையத்தில் கூறியுள்ளார்.

சிறுமி மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் மாரவில மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 5 நிமிடத்தில் டூபிளிகேட் சாவி தயாரிப்பது எப்படி?? ட்ரை பண்ணுங்க…!!
Next post கொலஸ்ட்ராலை குறைக்கும் “நட்ஸ் பிரியாணி”…!!