தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த சீன மாணவி ரெயில் மோதி பலி..!!

Read Time:1 Minute, 33 Second

timthumb (3)சீனாவில் போஷான் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகும். எனவே இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் போஷான் பாலிடெக்னிக்கில் படிக்கும் 19 வயது மாணவி அங்குள்ள ரெயில் நிலையம் சென்று இருந்தார்.

இயற்கை அழகில் மயங்கிய அவர் தண்டவாளத்தில் நின்றபடி ‘செல்பி’ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 100 கி.மீட்டர் வேகத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. அதை கவனிக்காமல் செல்பி எடுப்பதிலேயே கவனமாக இருந்தார். இருந்தாலும் அங்கிருந்த மற்ற பயணிகள் ரெயில் வருவதை கூறி பலத்த சத்தமிட்டு எச்சரித்தனர்.

ஆனால், செல்பி எடுப்பதிலேயே மிக சுவாரசியமாகவே மாணவி இருந்தார். எனவே, அவர் மீது ரெயில் பயங்கரமாக மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பரிசோதித்த டாக்டர்கள் மாணவி இறந்து விட்டதாக தெரிவித்தனர். செல்பி உயிரை குடித்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீடு புகுந்து பூண்டு திருடியவர் அடித்து கொலை..!!
Next post காதலால் வந்த வினை; தொலைபேசியில் ஏற்பட்ட வாய்தர்க்கம் கொலையில் முடிந்தது..!!