தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக தீயில் சாகசம் செய்த வாலிபர் பலி..!!

Read Time:1 Minute, 38 Second

timthumbஐதராபாத் பாத்தபஸ்தி பகுதியில் உள்ள சாலலாவைச் சேர்ந்தவர் முகமது ஜலாலுதீன் (வயது 19). இவர் சிறுவயதில் இருந்தே பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்து வந்தார்.

இந்த நிலையில் “இந்தியாவின் காட்டேலன்ட்” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக ஜலாலுதீன் தீ மூலம் பல்வேறு சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்டார். அவரது சாகச நிகழ்ச்சியை நண்பர்கள் செல்போனில் படம் எடுத்து தொலைக்காட்சிக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர்

முதலில் ஜலாலுதீன் வாயில் மண்எண்ணெய் ஊற்றி அதை ஊதி நெருப்பை ஏற்படுத்தினார்.

பின்னர் டீ-சர்ட்டில் மண்எண்ணெய் ஊற்றி எரியவிட்டு டிசர்ட்டை கழற்றி வீசும் சாகச நிகழ்ச்சி நடத்த முயன்றார்.

இதற்காக டீ-சர்ட்டில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்தார். இதனை நண்பர்கள் வீடியோ எடுத்தனர். ஆனால் டிசர்ட் இறுக்கமாக இருந்ததால் ஜலாலுதீனால் அதனை வேகமாக கழற்ற முடியவில்லை அதற்குள் தீ மளமளவென உடல் முழுவதும் பரவியது.

அலறிதுடித்த அவரை நண்பர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுரையில் சுங்கத்துறை அதிகாரி வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை…!!
Next post வீடு புகுந்து பூண்டு திருடியவர் அடித்து கொலை..!!