மதுரையில் சுங்கத்துறை அதிகாரி வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை…!!

Read Time:1 Minute, 40 Second

201604121649353220_Madurai-near-home-jewelry-robbery_SECVPFமதுரையில் சுங்கத்துறை அதிகாரி வீட்டின் கதவை உடைத்து 25 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமி களை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை கூடல்புதூரில் உள்ள ஏஞ்சல் நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 45). இவர் மதுரை சுங்கத்துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியும் அதே துறையில் வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று ராஜ்குமார் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம ஆசாமிகள் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்து ராஜ்குமார் வீட்டின் கதவை உடைத்தனர். பின்னர் உள்ளே புகுந்து அவர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 25 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.

வீடு திரும்பிய ராஜ்குமார், கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது 25 பவுன் நகை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கூடல் புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உக்ரைனில் இந்திய மருத்துவ மாணவர்கள் குத்திக் கொலை…!!
Next post தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக தீயில் சாகசம் செய்த வாலிபர் பலி..!!