3 ரயில்கள் மோதி உயிர் பிழைத்த அதிசய மனிதர்…!!

Read Time:2 Minute, 53 Second

get-310x165ஜேர்மனி நாட்டில் குடிபோதையில் தண்டவாளத்தில் விழுந்த வாலிபர் ஒருவரை அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதியும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

முனிச் நகரை சேர்ந்த பெயர் வெளியிடப்படாத 22 வயதான வாலிபர் ஒருவர் கடந்த ஞாயிறு அதிகாலை 6.19 மணியளில் அங்குள்ள Isartor S-Bahn ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

வாலிபர் அதிகாலை நேரத்திலேயே நன்றாக குடித்திருந்ததாக கூறப்படுகிறது. நடைமேடையில் அமர்ந்திருந்த அந்த வாலிபர், போதையில் தள்ளாடியவாறு எழுந்து முன்னோக்கி நடந்துச் சென்று தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.

வாலிபர் விழுந்த இடத்திலிருந்து சுமார் 10 மீற்றர் தொலைவில் ரயில் சுரங்கப்பாதை அமைந்துள்ளது. வாலிபர் தண்டவாளத்தில் விழுந்த வேகத்தில் எழுந்து எதிர்ப்புறம் நகர்ந்து செல்ல முயன்றுள்ளார்.

ரயில் நிலையம் என்பதால், அப்போது மிதமான வேகத்தில் வந்த ரயில் ஒன்று அவர் மீது உராய்ந்து நின்றுள்ளது. இதில் தடுமாறிய அந்த வாலிபர் அடுத்துள்ள தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.

சுமார் 10 நிமிடங்கள் இந்த போராட்டம் அங்கு நீடித்துள்ளது. அருகில் சுரங்கப்பாதை இருந்ததால், தூரத்தில் வரும்போதே இந்த வாலிபரை ரயில் ஓட்டுனர்களால் கவனிக்கம் முடியவில்லை.

இவ்வாறு அடுத்தடுத்து வந்த 3 ரயில்களினால் அவருக்கு பயங்கர காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால், 4-வது வந்த ரயில் ஓட்டுனர் வாலிபரை முன்னதாகவே பார்த்து அபாய ஒலியை எழுப்பி அவரை காப்பாற்ற உதவியுள்ளார்.

எனினும், வாலிபரின் உடலில் பல எழும்புகள் முறிந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்துள்ளது. மேலும் மூளையில் ரத்த கசிவும் ஏற்பட்டுருந்த நிலையில் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தற்போது அந்த அதிர்ஷ்டக்கார வாலிபர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தேவையான சிகிச்சைகளை பெற்று வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூதரக அதிகாரி ஓரினச்சேர்க்கையாளராக இருப்பதனால் வழக்கு…!!
Next post காதலியை ஏன் கொன்றேன்? காதலன் வாக்குமூலம்…!!