எந்த எண்ணெய்யில் என்ன இருக்கிறது…?

Read Time:3 Minute, 34 Second

oil_food_003-615x408ஒருவருக்கு ஒரு நாளைக்கு 15 முதல் 20 கிராம் எண்ணெய் போதுமானது.
அந்த அளவு அதிகமாகும்போது, ரத்தத்தில் சேரும் கொழுப்பின் அளவும் அதிகமாகும்.

ஒரு நாளைக்கு ஒருவருக்குத் தேவையான 1,800 கலோரி உணவில், 30 சதவிகிதம் கொழுப்பு இருக்கலாம்.

அந்த 30 சதவிகிதமும் நல்ல கொழுப்பிலிருந்து கிடைப்பதாக இருக்க வேண்டும். அதாவது உணவிலிருந்து கிடைக்கும் கொழுப்பாக இருப்பது நல்லது.

மற்றபடி எண்ணெய், வெண்ணெய், நெய் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் நேரடிக் கொழுப்பு 15 முதல் 20 சதவிகிதத்திற்கு மேல் அதிகரிக்காமல் இருக்க வேண்டும்.

எந்தக் காய்கறியை சமைத்தாலும், முதலில் ஆவியில் வேக வைத்து விட்டு, பிறகு தாளிப்பதற்கு மட்டும் எண்ணெய் உபயோகிக்கலாம்.

தோசை ஊற்றும் போது அந்தக் காலத்தில் செய்தது போல கல்லை, துணியால் துடைத்து விட்டு செய்தால் எண்ணெய் செலவு குறையும்.தோசை ஊற்றியதும், அதை மூடி வைத்து வேக விட்டாலும் எண்ணெய் அதிகம் தேவைப்படாது.

எந்த எண்ணெயில் என்ன இருக்கிறது?

பாமாயில்

1 கிராம் பாமாயிலில், 800 µg அல்லது mcg பீட்டா கேரட்டின் (விட்டமின் ஏ) உள்ளது. ஆனாலும், அந்த எண்ணெயில் உள்ளது சாச்சுரேட்டட் கொழுப்பு என்பதால் தொடர்ந்து உபயோகிக்க முடியாது.

சூரியகாந்தி எண்ணெய்

பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகம் என்பதால், இது உபயோகத்துக்கு ஏற்றது.

கடலை எண்ணெய்

பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு மிதமாக உள்ளது. ஆனாலும், ரத்தக் குழாய்களில் கொழுப்பு படியச் செய்வதில் இதற்கும் பங்குண்டு. பாமாயில் அளவுக்குக் கெடுதலானது அல்ல.

தவிட்டு எண்ணெய்

ரைஸ் பிரான் எண்ணெய் எனக் கேள்விப்படுகிறோம், அதுதான் தவிட்டு எண்ணெய். இதய நோயாளிகளுக்கு மிக நல்லது.

நல்லெண்ணெய்

இதுவும் பாலி அன்சாச்சுரேட்டட் வகையைச் சேர்ந்தது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து, நல்ல கொழுப்பாக மாற்றும் தன்மை கொண்டது.

ஆலிவ் ஆயில்

இதய நோயாளிகளுக்கு ஏற்றது. இதை சூடுபடுத்தக் கூடாது. பொரிக்க, வறுக்கப் பயன்படுத்த முடியாது. சாலட்டுக்கு உபயோகிக்கலாம்.

தேங்காய் எண்ணெய்

சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகமுள்ளதால், ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல.

கடுகு எண்ணெய்

ஆன்ட்டி ஆக்சிடெண்ட் அதிகமுள்ளது. ஆன்ட்டி பாக்டீரியல் தன்மையும் கொண்டது. இதயத்துக்கு நல்லது. கடுமையான வாசம் மற்றும் காரணமாக இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முச்சக்கரவண்டி விபத்தில் இராணுவ வீரர் உயிரிழப்பு…!!
Next post 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் சிறையில் இருந்த இந்தியர் மர்மச்சாவு…!!