ஆணுக்கு மார்பகங்கள் பிளாஸ்டிக் சர்ஜரியின் அசுரத்தனமான விளையாட்டு..!!
பிளாஸ்டிக் சர்ஜரி என்ற வார்த்தை உலகளவில் அனைவரும் அறியக் காரணமாக இருந்தது மைக்கல் ஜாக்சன். பலமுறை தனது முகத் தோற்றத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றியமைத்து கொண்டார் மைக்கல்.இதனால், நாள்பட அவருக்கு சரும கோளாறுகளும், அழற்சிகளும் உண்டாக ஆரம்பித்தன.
இப்போது சிலிக்கான் பந்துகள் கொண்டு மேல் அழகு, பின்னழகு போன்றவற்றை பெரிதுப்படுத்துக் கொள்ளவும், அழகுப்படுத்திக் கொள்ளவும் நிறைய மாடல்கள் முனைகின்றனர்.மாடல்கள் மட்டுமல்ல வெகுஜன மக்களும் கூட. இதில் சிலர் ஏடாகூடமாகவும், தவறுதல்கள் நடந்தும் அசுரத்தனமாகவும் மாறியுள்ளனர்
மார்பகங்கள்
பிஷைன் எனும் இந்த நபர் தான் ஐரோப்பாவின் பெரிய போலியான மார்பகங்கள் கொண்டுள்ள நபர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் இவர் தனது மார்பகங்களை மிக பெரிதாக மாற்றிக் கொண்டார்.இதனால் எனக்கு முதுகுவலி ஏதும் ஏற்படவில்லை எனவும், ஆடைகள் வாங்குவதில் தான் சற்று சிரமமாக இருக்கிறது என பிஷைன் கூறியுள்ளார்.
புட்டம்
$15000 செலவு செய்து தனது பின்னழகை பெரிதுப் படுத்திக் கொண்டுள்ளார் இந்த பெண். சிலிக்கான் பந்துகளை வைத்து உடல் பாகங்களை பெரிதுப் படுத்திக் கொள்வதும், அழகாக மாற்றிக் கொள்வதும் மேற்கத்திய நாடுகளில் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதனால் நிறைய பேர் உடல்நல அபாயங்களையும் சந்தித்து வருகின்றனர்.
ஆறு இன்ச்
தனது உயரத்தில் ஆறு இன்ச் அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில். மிகவும் வலி மிகுந்த அறுவை சிகிச்சை செய்துக் கொண்டுள்ளார் இவர்.
இதழ்கள்
ஜெசிக்கா ரேப்பிட் போல தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக கிறிஸ்டினா ரேய் எனும் 22 வயது பெண் தனது இதழ்களை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து பெரிதுப்படுத்திக் கொண்டார்
போலி டாக்டர்
ஆணாக இருந்து திருநங்கையாக மாறிய நபர் ஒருவர் பின்னழகை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொள்ள வந்திருக்கிறார். அவருக்கு கிறுக்குத்தனமாக ஏதோ கலவையை இன்ஜெக்ஷன் போட்டுள்ளார் மோரிஸ் எனும் போலி மருத்துவர்.
இதனால் அந்த திருநங்கை அபாயமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு தான் மோரிஸ் போலி என கண்டறியப்பட்டு மியாமி போலீசாரால் கைது செய்யப்பட்டார்
பார்பி கேர்ள்
வலேரியா லுக்யாநோவா எனும் உக்ரைன் பெண் மிகவும் பிரபலமானவர். இவர் பார்பி கேர்ள் போல தோற்றமளிக்க வேண்டும் என்பதால். தனது விலா எலும்பையே அகற்றிக் கொண்டார். இதனால் தனது இடை பார்பி கேர்ள் போல மெலிந்து தோற்றமளிக்கும் என இவர் நம்பினார், அதே போல மாறியும்விட்டார்
07-1460011031-6mostdisturbingbodypartsafterplasticsurgery
கான்கிரீட் இன்ஜெக்ஷன்
மியாமியின் மோரிஸ், போலி மருத்துவரிடம் சிக்கி இப்படி மாறிவிட்டார் இந்த பெண்மணி. மிஸ்.நரைன்சிங் என்பவர். இவரும் ஆணாக பிறந்து பெண்ணாக வாழ்ந்து வருபவர் ஆவார். விஷத்தன்மையான கான்கிரீட் இன்ஜெக்ஷன் போட்டு கண்ணம், இதழ் கொடூர மாற்றம் உண்டாக்கிவிட்டார் அந்த போலி மருத்துவர் மோரிஸ்.
ஆணுக்கு மார்பகங்கள்
ஒரு லட்ச அமெரிக்க டாலர்கள் பெட்டு கட்டி அதில் ஜெயிக்க, பிரியான் செம்பிக் என்பவர் கடந்த 1996-ம் ஆண்டு பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் 38C அளவு மார்பகங்கள் உண்டாக்கிக் கொண்டார். இதில் ஆச்சரியம் என்னவெனில். இப்போது வரை இந்த மார்பகங்களோடு தான் உலா வருகிறார் பிரியான் செம்பிக்.இவற்றையும் பார்வையிடுங்கள்
Average Rating