முச்சக்கர வண்டியில் இறுதிப்பயணம் சென்ற தாயும் மகளும்…!!

Read Time:1 Minute, 50 Second

1909613256Acccதிருகோணமலை பிரதான வீதியில் திங்கட்கிழமை (11) இரவு இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த தாயும் மகளும் பலியாகியுள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

சாம்பல்தீவு ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த வாசுகி (வயது 59) அவரது மகளான சிவதாரணி (வயது 33) ஆகியோரே இவ்விபத்தில் பலியாகியுள்ளனர்.

இதேவேளை, அதே இடத்தைச் சேர்ந்த ஜே.அருள்ராஜ் (வயது 31), கே.ராஜேஸ்வரி (வயது 70) ஆகியோர் படுகாயமடைந்துள்ள நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டியுடன் திருகோணமலை 22ஆவது இராணுவப் படையணிக்குச் சொந்தமான டிபெண்டர் ரக வாகனம் மோதி இந்த விபத்துச் சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இடம்பெற்ற இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்ட பொலிஸாருக்கு திருகோணமலை 22ஆவது இராணுவப் படையணிக்குச் சொந்தமான டிபெண்டர் ரக வாகனமே முச்சக்கரவண்டியை மோதிவிட்டு தப்பிச்சென்றமை தெரியவந்துள்ளது.

இந்த விபத்தைத் தொடர்ந்து குறித்த வாகனத்தின் சாரதியான 29 வயதுடைய இராணுவ வீரரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறியதோடு சம்பவம் தொடர்பான விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நுரைச்சோலை மின் நிலையத்தில் மீண்டும் கோளாறு…!!
Next post வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நோயளி தற்கொலை…!!