சீனாவில் பலத்த மழைக்கு 612 பேர் பலி

Read Time:1 Minute, 2 Second

China.Flag.jpgசீனாவின் தெற்கு பகுதியில், “காமி” என்ற புயல் கடந்த 2 வாரங்களாக வீசி வருகிறது. இதனால் கடற்கரை நகரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மழை-புயலால் பலத்த சேதம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த மழைக்கு 612 பேர் பலியாகி இருக்கிறார்கள். 204 பேரை காணவில்லை.

இந்த புயலால் ஜியாங்சி, கின்சவா மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. அந்த பகுதியில் ராணுவ வீரர்கள் வசித்த குடியிருப்பு அடியோடு நாசம் அடைந்தது. இதனால் அங்கிருந்த 38 ராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் கதி என்ன என்று தெரியவில்லை.

இந்த புயல் பலவீனம் அடைந்து விட்டதாக நேற்று வானிலை நிலையம் அறிவித்து இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 2-வது நாளாக தாக்குதல்: விடுதலைப்புலிகளின் விமானதளம் மீது இலங்கை விமானங்கள் குண்டு வீச்சு
Next post லெபனான் போர் -அல்கொய்தா எச்சரிக்கை