உக்ரைனில் இந்திய மருத்துவ மாணவர்கள் குத்திக் கொலை…!!

Read Time:1 Minute, 24 Second

201604111331475610_Two-Indian-med-students-stabbed-to-death-in-Ukraine_SECVPFஉக்ரைன் நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த இரு மருத்துவ மாணவர்கள் கொடூரமான முறையில் குத்திக் கொல்லப்பட்டனர்.

உக்ரைன் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள உழ்கோரோட் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சிலர் மருத்துவ கல்வி பயின்று வருகின்றனர்.

இவர்களில் முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஷைன்டில்யா, காசியாபாத் மாவட்டத்தை சேர்ந்த அன்குர் சிங் ஆகியோரை உக்ரைன் நாட்டை சேர்ந்த சில மர்ம நபர்கள் குத்திக் கொன்று விட்டனர். கத்திக் குத்து சம்பவத்தில் காயமடைந்த இந்திய மருத்துவ மாணவரான இந்திரஜீத் சிங் சவுகான் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர் ஆக்ரா நகர சேர்ந்தவர் என்று உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக டெல்லியில் உள்ள வெளியூறவுத்துறை அமைச்சகத்துக்கு தகவல் வந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபாகரனுக்கு சிலை எழுப்ப ஆசைப்படும், EPDP டக்ளஸ் தேவானந்தா..!!
Next post அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லாத உலகை உருவாக்குவோம்: ஜி-7 நாடுகள் மாநாட்டில் வெளியுறவுத்துறை மந்திரிகள் பிரகடனம்..!!