இன்று சிறப்பாக நடைபெற்ற புங்குடுதீவு அனைத்து பாடசாலை மாணவ, மாணவயியர்க்கான பொது அறிவுப் போட்டிகள்..!! (படங்கள்)

Read Time:3 Minute, 44 Second

ab61b8c3-65fc-459a-a2cb-0adc733656daஎதிர்வரும் 18.04.2016 அன்று தாயகம் சமூக சேவையகம் அமைப்பினால் புங்குடுதீவு ஸ்ரீகணேச மகாவித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள கடைத்தொகுதியில் நூலகம் ஒன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு புங்குடுதீவு தாயகம் சமூக சேவையகத்தினால்; புங்குடுதீவு அனைத்துப் பாடசாலைகளிலும் தரம் ஒன்றுமுதல் தரம் எட்டுவரையில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்க்கு இன்று யாழ். புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் அச்சுப்பதித்தல், படம் வரைதல், ஒட்டுச் சித்திரம், சுரண்டல் சித்திரம், பொதுஅறிவுப் போட்டிகள் போன்ற பல்வேறு போட்டி நிகழ்வுகள் நடைபெற்றன.

மேற்படி போட்டிகளிலே புங்குடுதீவிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் சேர்ந்த சுமார் 150ற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தப் போட்டிகளுக்கு ஆசிரியர்களாகவும் நடுவர்களாகவும் பின்வருவோர் செயற்பட்டிருந்தனர்…

திருமதி சுலோசனம்பிகை தனபாலன் (புங்குடுதீவு தாயகம் கல்வி நிலையம் பிரதம போஷகர்)

செல்வி.ஜெகநந்தினி முத்துக்குமாரு (யாழ். வசாவிளான் மத்திய கல்லூரி)

திரு.திலீபன் (சித்தி விநாயகர் வித்தியாலய அதிபர்)

திருமதி. மகாராணி (சேர் துரைச்சுவாமி வித்தியாலயம்)

திருமதி.பாலேஸ்வரி (புங்குடுதீவு மகா வித்தியாலயம் ஆசிரியை)

செல்வி.கே.மாதுரி. (புங்குடுதீவு ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம்)

செல்வி மீனா உதயதர்சினி (புங்குடுதீவு ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம்)

செல்வி.மீனா செல்வின் புஷ்ப டெனின்சில்டா (புங்குடுதீவு தாயகம் கல்வி நிலையம்)

செல்வி.ட. பதுர்சனா (புங்குடுதீவு தாயகம் கல்வி நிலையம்)

இப் போட்டிகள் இன்றுகாலை 9.00மணிமுதல் 12.00மணிவரை சிறப்பாக நடைபெற்றது.

மேற்படி போட்டிகளிலே 150ற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மாத்திரமல்லாது அவர்களின் பெற்றோர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

நடைபெற்ற போட்டிகளில் மேற்படி மாணவ, மாணவிகளிலே முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கான சிறப்பு பரிசில்களும் போட்டிகளில் கலந்து கொண்டிருந்த மாணவ, மாணவியர்கான 5 ஆறுதல் பரிசில்களும் எதிர்வரும் 18.04.2016 திங்கட்கிழமை அன்று தாயகம் சமூக சேவையகத்தினால் ஸ்ரீகணேச மகாவித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள கடைத்தொகுதியில் அமைக்கப்பட்ட நூலகத் திறப்பு விழாவின் போது வழங்கப்படவுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி,

திருமதி. சுலோசனாம்பிகை,
பிரதம போசகர்,
தாயகம் சமூக சேவையகம்,
புங்குடுதீவு.

2c9bb0fd-2138-44fc-a3d9-0cd748407a38

3a006625-e12b-41e1-abf9-6ec17c7bc3a9

4aeabd56-c3bf-4245-9292-d9e8fbddaf6d

5af6e5bf-6abc-40b6-826b-764dab57daa4

6d86b5cf-9632-437b-8963-1217cd02ff07

6fc08190-9b6e-4574-8cc7-579824411385

7ad0a591-7b79-4910-b870-43587e2329f0

7c4c960d-4a0d-45c2-b53f-6bf23d22a834

8d42c60f-0b7b-4389-9299-6093f02f0bbd

9fc01287-3f89-4d36-a899-9b97fbc47b4f

048aa417-3e67-4a49-98fa-aa7dde41a00d

70d6973e-2ffc-4bd8-846f-d3ddd80df245

231ee5b9-b78f-43e9-a798-7895bf9be7ad

332c3358-8504-47c3-b457-836c2caee312

1872dcd6-6e97-4a21-b4ad-8c83cee7e56c

3237ae0e-e8bd-47e3-ac00-d1bf97308fec

4579b8b5-3398-4af6-8402-a815d7cfc809

08182d12-bf91-40ac-bb7c-7b3d48731c87

4967592b-3c38-4b60-81f6-648e5fe40737

48910081-cc4d-4950-a0b8-a8e836732255

72130339-13b8-4785-8a60-77dbfb43f2e1

a4eff944-64dd-40ca-9900-35a2cec4fb74

a7d88561-fa72-459d-b67c-3af8d0c80373

ac4bffe0-2251-4573-a403-aa2902cc82fc

cd663106-4b3c-4a1b-b56a-c04fcafca86d

d8c9669d-772a-4514-81c5-51ef5545ef6b

d96bc241-8f43-4b1e-a074-fdf67e1c59bb

d63693e2-8b66-4b94-9c85-b18c1a6f790f

e1d745b6-e81e-432a-a37e-4850b2819a00

e7b4d5ef-99f2-4ac5-9364-8ad429ea1572

e479abb1-44ba-4470-8c5e-3322315cea63

e4993b2f-2800-4bb7-8b04-94b399977b09

e9151277-f180-4040-a68e-7e8df97d26dd

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருத்தணி அருகே லாரி மோதி புது மாப்பிள்ளை பலி…!!
Next post சின்னசேலம் கடத்தி கற்பழிக்கப்பட்ட மாணவி கேரளாவில் மீட்பு: மாணவர் உள்பட 3 பேர் கைது…!!