சனநெருக்கடி மிக்க பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல்

Read Time:1 Minute, 30 Second

jaffana-map.gifயாழ்ப்பாணம், காங்கேசன்;துறை சிவன் கோவிலுக்கு அருகில் இன்று காலை 7.25 மணிக்கு எல்.ரீ.ரீ.ஈ. யி;ன் கிளேமோர் குண்டு வெடித்ததில் படைவீர் ஒருவரும் பொதுமக்கள் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் யாழ். மற்றும் பலாலி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என இராணுவத் தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் பொதுமக்களும், பாடசாலை மாணவர்களும் பயணம் செய்யும் நெருக்கடியான நேரத்திலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது எல்.ரீ.ரீ.ஈ. யினரின் மற்றுமொரு மனிதத்தன்மையற்ற தாக்குதலாகும். பாதைச் சோதனையில் இருந்த இராணுவத்தினரை இலக்கு வைத்தே இத்தாக்குதலை எல்.ரீ.ரீ.ஈ. யினர் நடத்தியுள்ளனர்.

இது தொடர்பாக யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கு அறிவித்திருப்பதாகவும், யாழ். பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்தச் செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வேண்டுமென்றே தாக்கிய இஸ்ரேல் -ஐ.நா
Next post 2-வது நாளாக தாக்குதல்: விடுதலைப்புலிகளின் விமானதளம் மீது இலங்கை விமானங்கள் குண்டு வீச்சு