கணவருக்கு ஊதியம் இல்லை: மனைவியை நாடுகடத்த பிரித்தானிய அரசு முடிவு…!!

Read Time:2 Minute, 40 Second

uk_family_003பிரித்தானிய நாட்டில் கணவருக்கு போதிய வருமானம் இல்லாததால் அவருடைய மனைவியை நாடுகடத்த அந்நாட்டு குடியமர்வு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க நாட்டை சேர்ந்த கேட்டி ஜேம்ஸ்(40) என்ற பெண் பிரித்தானியாவை சேர்ந்த டோமினிக்(42) என்பவரை கடந்த 2005ம் ஆண்டில் இணையத்தளம் மூலம் சந்தித்துள்ளார்.

இருவருக்கும் காதல் ஏற்பட, காதலியை திருமணம் செய்ய டோமினிக் அமெரிக்கா சென்றுள்ளார். 2006ம் ஆண்டு இருவரின் திருமணமும் முடிந்த பிறகு பிரித்தானிய நாட்டில் தற்காலிக விசாவில் கேட்டி ஜேம்ஸ் குடியேறியுள்ளார்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் கேட்டி ஜேம்ஸின் விசா காலம் முடிவடைந்துள்ளது. இதனை புதுபிக்க அவர் விண்ணப்பம் செய்தபோது, அவரது கோரிக்கையை குடியமர்வு அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.

கேட்டி ஜேம்ஸின் கணவருக்கு குறைவான ஊதியம் மட்டுமே வருவதால், கேட்டி ஜேம்ஸ் உடனடியாக அமெரிக்க நாட்டிற்கு திரும்ப வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பிரித்தானிய சட்டப்படி, அந்நாட்டு குடிமகன் வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்தால், அவருக்கு சராசரியாக ஆண்டு வருமானம் 18,600 பவுண்ட் இருக்க வேண்டும்.

மேலும், குழந்தையுடன் குடும்பம் நடத்த வேண்டும் என்றால், 22,400 பவுண்ட் வருமானம் இருக்க வேண்டும்.

ஆனால், டொமினிக்கிற்கு இதைவிட குறைவாகவே வருமானம் வருவதால், அவரது மனைவி பிரித்தானியாவில் தங்க முடியாது என குடியமர்வு அதிகாரிகள் உறுதிப்பட தெரிவித்துள்ளனர்.

பிரித்தானிய அரசின் இந்த அதிரடி உத்தரவை தொடர்ந்து, இப்பிரச்சனையை பிரதமர் கமெரூனின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாக டோமினிக் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேடையில் பாம்புகளுடன் ஆட்டம் போட்ட பெண் பாடகர்: நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்…!!
Next post பிரசெல்ஸ் தற்கொலை தாக்குதலில் திடீர் திருப்பம்?