அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் உடல் அமைப்பை ஆபாசமாக விமர்சித்த மருத்துவர்கள்: அம்பலப்படுத்திய நோயாளி (வீடியோ இணைப்பு)
அமெரிக்காவில் பெண்மணி ஒருவர் தனக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்களின் உரையாடலை ரகசியமாக பதிவு செய்துள்ளார்.
டெக்ஸாஸ் மாநிலத்தை சேர்ந்த Ethel Easter என்ற பெண்மணி குடலிறக்க(hernia) பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் மருத்துவரிடம் சிகிச்சைக்காக அணுகியபோது, அவரின் அணுகுமுறை இவரை அவமதிக்கும் விதமாக இருந்துள்ளது, மேலும் இவரை பிடிக்காததது போலவே மருத்துவர் நடந்துகொண்டுள்ளார்.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இவர், மருத்துவரிடம் தனக்கு அறுவை சிகிச்சை செய்யுமாறு கூறியுள்ளார், அதற்கு மருத்துவர், நீங்கள் 2 மாதங்கள் காத்திருக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.
அதற்கு இவர், இரண்டு மாதங்கள் என்னால் காத்திருக்க இயலாது, அதனால் விரைவில் அறுவை சிகிச்சை செய்யலாம் என கூறியுள்ளார்.
அதற்கு மருத்துவர், நீங்கள் யாரென்று நினைத்தீர்கள்? எல்லோரைப்போலவும் நீங்களும் காத்திருக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து 2 மாதங்கள் கழித்து இவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவக்குழு தயாரானபோது, அறுவை சிகிச்சை செய்கையில் மருத்துவர்கள் மேற்கொள்ளும் உரையாடல்களை பதிவு செய்வதற்காக தனது தலைமுடியில், சிறிய அளவிலான ரெக்டாரை(Recorder) மறைத்துவைத்துள்ளார்.
அறுவை சிகிச்சை முடிந்த பின்னர், அந்த பதிவினை கேட்ட இவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த இவர், மருத்துவர் என்னை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்டார், மேலும் எனது உடல் அமைப்பினை பற்றி மோசமான கருத்துக்களை சக மருத்துவர்களிடம் பகிர்ந்துகொண்டார்.
அதுமட்டுமின்றி, எனது உடலை தொடுவது தொடர்பான கருத்துக்கள், மேலும் என்னை கிண்டல் செய்வதற்கு கொமடி நடிகரான bill cosby – ஐயும் பயன்படுத்திக்கொண்டார்கள்.
நான் குண்டாக இருக்கிறேன், கருப்பாக இருக்கிறேன் எனக்கூறி மருத்துவர்கள் சிரித்துக்கொண்டார்கள், இதனை அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேனே தவிர இந்த சம்பவம் குறித்து வழக்கு தொடர எனக்கு விருப்பமில்லை என கூறியுள்ளார்
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating