மக்கள் மீளத்திரும்ப அனுமதிக்கப்படுவதை மாத்திரம் மீள்குடியேற்றம் என அர்த்தப்படுத்த இயலாது! -நிருபா குணசேகரலிங்கம்..!!
உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ள 12,681 குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரம் பேர் வரையானோரே தற்போது மீளக்குடியேற்றப் படவேண்டியுள்ளதாக அரசாங்கத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
போரின் பின் ஒரு சராசரி இயல்பு நிலைக்கு மக்கள் வரவேண்டுமா யின், மக்கள் தமது சொந்தக் கிராமங்களுக்கு உரிமைகளுடன் சென்றே ஆகவேண்டும். ஆகவே, இவர்களது மீள்குடியேற்றம் தாமதமின்றி நடைபெறவேண்டும்.
யுத்த காலத்தில் தமிழ் மக்கள் இலட்சக் கணக்கில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களாகவும் வெளிநாடுகளில் அகதி நிலையிலும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் வெளிநாடுகளில், குறிப்பாக மேற்குலக நாடுகளில் தஞ்சமடைந்தவர்கள் அந்நாடுகளிலேயே தற்போதும் வாழ விரும்புகின்றனர்.
எனினும், இந்தியாவில் தஞ்சமடைந்தவர்கள் உரிய வசதிவாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும் பட்சத்தில் மீளவும் தாயகம் திரும்ப விரும்புகின்றனர். காரணம், மேற்குலகில் தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு கிடைக்கப்பெறும் சலுகைகள்இ உரிமைகள் போல் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளவர்களுக்குக் கிடையாது. இவ்வாறாக ஆயிரக்கணக்கானவர்கள் நாட்டின் வெளியேயும் அகதிகளாகவுள்ளனர்.
”மீள்குடியேற்றப்படவேண்டியவர்கள் ” என ஒரு பகுதியினர் காத்திருக்க, மீள்குடியேற்றப்பட்டவர்களின் நலன்கள் தொடர்பிலும் நீண்டதோர் அவதானம் தற்போதும் தேவையாகவுள்ளது. இந்த நிலையில் கடந்த காலங்களில் நடைபெற்ற மீள்குடியேற்றங்கள் தொடர்பில் அதிக விமர்சனங்கள் உள்ளன. அவ் விமர்சனங்களுக்கு இன்றைய அரசாங்கம் பொறுப்புடையது அல்ல; எனினும் நடைமுறையில் உள்ள அரசாங்கம்இ கடந்த அரசாங்கத்தின் மீள்குடியேற்றத்தில் உள்ள அவலங்களைத் தீர்ப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பில் உள்ளது.
காரணம். போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் அவர்களது சொந்த கிராமங்களுக் குத்திரும்பியபோதும் மிகவும் பாதிக்கப்பட்ட வாழ்க்கையினையே வாழ்ந்து வருகின்றனர். இதனை வன்னியின் உட்கிராமங்களுக்குச் செல்வோர் கண்டு கொள்ள முடியும். இதற்கு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு மீள்குடியேற்றத்தில் சரியான கொள்கைகள் பின்பற்றப்படாமையே அடிப்படையாகும். அடுத்துஇ சகலதையும் இழந்த மக்களுக்கு உரிய நிவாரணங்கள் மற்றும் நிவர்த்திப்புக்கள் வழங்கப்படாமல் விடப்பட்டதும் ஒரு காரணமாகும்.
எனினும்இ கடந்தகாலத்தில் மீளக்குடியேற்றப்பட்டவர்களின் அவலங்கள் பற்றி அதிகம் பேசப்படவில்லை. மாறாக மீளக்குடியமராதோரை மீளக்குடியேற்றுதல் என்ற விடயமே அதிக கரிசனைக்குரியதாகப் பேசப்படுகின்றது. அந்த வகையில் தான் 12 ஆயிரத்து 681 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 44 ஆயிரம் வரையிலான மக்கள் மீளக்குடியேற்றப்படவேண்டும் என மீள்குடியேற்ற அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறுதி யுத்த காலப்பகுதியில் நாடு அதுகாலவரையில் சந்தித்திராத இடம்பெயர்ந்தோர் பிரச்சினையினை எதிர்கொண்டது. அதாவது, அரசாங்கம் வெறும் ஒரு இலட்சத்திற்கு உட்பட்டவர்களே வன்னியில் உள்ளனர் என்று உள்நோக்கத்துடன் மதிப்பீடு செய்தது. எனினும் கண்கூடாகவே இலட்சக் கணக்கானவர்கள் வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் இடம்பெயர்ந்தோர் முகாம்களை வந்தடைந்தனர். முகாம்களையடைந்த இடம்பெயர்ந்தவர்கள் சிறைக்கைதிகள் போல தான் நடத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்காக ஒட்டுமொத்த இலங்கையே வெட்கமடைய வேண்டும்.
இந்த இடத்தில் இடம்பெயர்ந்தோரை சிறைக்கைதிகள் போன்று வைத்திருக்க முடியாது என்ற சர்வதேசத்தின் அழுத்தங்கள் மற்றும் மக்களை இலட்சக்கணக்கில் முகாம்களில் வைத்திருக்க முடியாது என்ற நெரு க்கடி ஏற்பட்டதும் அரசாங்கத்தினால் ஆரம் பிக்கப்பட்ட செயன்முறையாகவே மீள்குடி யேற்றம் அமைந்தது. ஆட்சியில் இருந்த மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் மிகுந்த பாதுகாப்புக்கெடுபிடிகளுடன் மக்களை சில சில கிராமங்களுக்குச் செல்ல அனுமதித்தது.
இவ்வாறாகவே மீள்குடியேற்றம் என்ற பெயரில் இலட்சக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். உண்மையில் அங்கு மீள்குடியேற்றம் என்ற சொல்லை அரசாங்கம்; உபயோகித்தாலும் அது மீள்குடியேற்றமல்ல.
மீளத்திரும்புதலே நடைபெற்றது. அடிப்படையில்இ சொத்துக்கள் உடைமைகள் மற்றும் உயிர்கள் என சகலதையும் இழந்த மக்கள் அவர்களது கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளின்றி அனுப்பிவைக்கப்பட்ட அவலமேயாகும்.
பத்துத் தகரங்களும் ஐந்து சீமெந்துப் பைகளுமே மீள்குடியேற்றம் எனக் கொண்டு சென்று இறக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. இதேவேளைஇ சிலருக்கு மீள்குடி யேற்றக் கொடுப்பனவாக 25 ஆயிரம் ரூபா பணமும் வழங்கப்பட்டது. இவற்றுக்கு மேலாக சிலருக்கு காலப்போக்கில் இந்திய அரசாங்கத்தின் வீட்டுத்திட்டமும் கிடைக்கப்பெற்றது. இந்த இடத்தில் தான் மீளக்குடி யேற்றத்தில் என்ன நடைபெற்றது என்பது கேள்வியாகவுள்ளது?
இதுகாலவரையில் ஒரு இலட்சத்து 58 ஆயிரத்து 181 வரையான குடும்பங்களைச் சேர்ந்த 5 இலட்சத்து 24 ஆயிரத்து 944 பேர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இத் தொகைக்குள் யாழ்ப்பாண மாவட்டத்தில் 31 ஆயிரத்து 845 குடும்பங்கள்இ மன்னாரில் 26 ஆயிரத்து 390 குடும்பங்கள்இ கிளிநொச்சியில் 41 ஆயிரத்து 862 குடும்பங்கள்இ முல்லைத்தீவில் 41 ஆயிரத்து 322 குடும்பங்கள் என மீளக்குடியேற்றப்பட்டுள்ளனர். இம் மீள்குடியேற்ற தொகை ஆட்சி மாற்றத்தின் பின்னர் மாத்திரம் இடம்பெற்றது அல்ல.
கடந்த அரசாங்கத்தின் ஆட் சிக் காலப்பகுதியில் இடம்பெற்ற மீள்குடியேற்றங்களை யும் உள்ளடக்கிய தொகையேயாகும். எது எப்படியிருந்தபோதும் மீளக்குடியேற்றப்பட்டவர்களது வாழ்வாதாரம் மறு சீரமைக்கப்பட வில்லை என்ற நிலையில் மாற்றுத் திட்ட ங்களை இன்றும் முன்வைக்கவேண்டிய அவசியம் உள்ளது.
அதேவேளைஇ சாதாரணமாக மீளத்திரும்பிய மக்கள் என்ன என்ன நிவாரணங்களுக்கு உரியவர்கள் என்பதை பொது அறிவித்தல் வாயிலாக வெளியிட்டு பெறவேண்டிய உதவிகளைப் பெறாதவர்களுக்கு தற்போதைய நிலையில் நிவாரணங்கள் வழங்கப்படவேண்டும். இந் நிவாரண விடயத்திற்குள் தொழில் நிலைமைகளுக்கான சூழல் ஏற்படுத்தப்படுவது கட்டாயமாகும்.
போரினால் அழிவடைந்த அரச கட்டடங் கள் போரின் பின் சீக்கிரமாகக் கட்டியெழுப்பப்பட்டன.அதற்கு அடுத்த படியாக பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகளான வீதி அபிவிருத்திஇ மின்சார விநியோகம் போன்றன நடைபெற்றுள்ளன. இவ்வாறாக நடைபெற்ற அபிவிருத்திகள் நேரடியாக போரினால் பாதி க்கப்பட்ட மக்களுக்கு நேரடியான மீள்விப்பினைக் கொடுக்கவில்லை.
நடைபெற்ற மீள்குடியேற்றங்களில் பல சர்வதேச அழுத்தங்களுக்காகவே மேற்கொள்ளப்பட்டன. மக்களை முகாம்களில் இருந்து வெளியேற்றிவிட்டால் மீள்குடியேற்றம் பூர்த்தி என்று கூறிவிடலாம் என்ற எதிர்பார்ப்புடனேயே மேற்கொள்ளப்பட்டது.
உதாரணமாக, கடந்த 2012ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜெனீவா மாநாட்டினை சமாளிப்பதற்காக வவுனியா இடைத்தங்கல் முகாம்கள் மூடப்பட்டன. இடைத்தங்கல் முகாமில் இருந்த மக்கள் இரவோடு இரவாக வேறு இடங்களுக்குக் கொண்டு சேர்க்கப்பட்டனர். இவ்வா றாகஇ முல்லைத்தீவு மாவட்டத்தின் வலைஞர்மடப்பகுதியில் நிரந்தரமாக குடியிருந்த கடல்தொழில் செய்யும் குடும்பங்களை கடல் வளமே அற்ற புதுக்குடியிருப்பிற்கு அப்பாலுள்ள திம்பிலி என்ற கிராமத்தில் அன்றைய அரசாங்கம் மீளக்குடியேற்றியது.
இவ்வாறு அடிப்படைகள் ஏதுவுமற்று குடியேற்றப்பட்ட மக்கள் பின்னர் வாழ்வாதாரத்திற்கே வழியின்றி அலையவேண்டி நேர்ந்தது. இது அரசாங்கம் இதய சுத்தியுடன் சர்வதேச விடயங்களை அணுகாது அழுத்தங்களைச் சமாளிப்பதற்காக மக்களை பகடைக்காயாக்கியது என்பதையே காட்டுகின்றது.
மீள்குடியேற்றத்தின் உண்மையினை வெளியுலகம் அறிவதை கடந்த அரசாங்கம் விரும்பவில்லை. எல்லாவற்றினையும் மூடுமந்திரமாக வெளியுகிற்கு எல்லாம் சரியாக நடந்துவிட்டது என்ற காட்சிப்படுத்தலையே அது மேற்கொண்டது. யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று இடம்பெயர்ந்தவர்கள் முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் உள்ளனர் என இன்றைய அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆனால் 2013 காலப்பகுதியில் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபராக இருந்த சுந்தரம் அருமைநாயகம் யாழ். மாவட்டத்தில் மீளக்குடியமர வேண்டியோர் பற்றிய விபரம் தம்மிடம் கிடையாது என்று ஒரு தடவை சொல்லியிருந்தார். அக்கருத்து அப்போது அரசுக்கு வெளியில் நின்றவர்களின் கடும் எதிர்ப்பிற்குரியதாக அமைந்தது. அரசியல் அழுத்தங்களுக்காக அரச நிர்வாகமும் மனிதாபிமானப் பிரச்சினையான மீள்குடியேற்றம் பற்றிய இடர்களை மூடிமறைப்புச் செய்தே வந்தது.
தமிழ் மக்களின் அவலங்களுள் ஒன்றான மீள்குடியேற்றம் அரசியல் அழுத்தங்களால் பல்வேறுபட்ட மூடுமந்திரங்கள் கூறப்பட்டு மறைக்கப்படுவதொன்றாகவே இருந்து வந்துள்ளது. எனவே, கடந்த காலத்தில் மேற்கொ ள்ளப்பட்ட மீள்குடியேற்றங்கள் பலவற்றை அடிப்படையில் மீள்குடியேற்றம் எனக் கூற முடியாது. அதற்கு இன்றைய அரசாங்கத் தினை நாம் குற்றஞ்சாட்ட முடியாது என்பதுவும் உண்மை.
எனவே இவ்வாறானதோர் சூழ்நிலையில், இன்றைய அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையிலான மீள்குடியேற்ற அமைச்சு மக்களின் கடந்தகால மீள்குடியேற்றத்தின் உண்மைத்துவம் பற்றி பரந்த ஆய்வு ஒன்றை ஆரம்பிக்க வேண்டும். அதன்வழியாக போர் முடிவடைந்து 7 ஆண்டுகள் ஆகின்ற நிலையிலும் வாழ்வாதாரத்தினை இழந்துள்ள மக்களின் நிலை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
அத்துடன் மீள்குடியேற்றத்திற்கா கக் காத்திருக்கின்ற மக்களின் அவலங்க ளும் சொல்லில் அடங்காதவையாகவுள்ளன. இந்நிலையில் மீள்குடியேற்றம் பூர்த்தியடை யும் வரையில் மீளக்குடியமராது இருக்கின்ற மக்களுக்கு தொடர் நிவாரணம் வழங்கப்படவேண்டும். நிவாரணம் பெறுவது பாதிக்கப்பட்ட மக்களின் உரிமையாகும்.
மீள்குடியேற்றம் சர்வதேச வரையறைக ளைக் கொண்டதாகவும் திட்டமிடப்பட்டதா கவும் அமைந்திருந்தால் வடக்கிலும் கிழக் கிலும் கணிசமான மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தவிர்த்திருக்கலாம். மீள்குடியேற்றத்திற்கு என நியமங்கள் உள்ளன. அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்தோர் வீட்டு மற்றும் ஆதனமீளளிப்புத் தொடர்பான ஐக்கி யநாடுகள் சபையின் கோட்பாடுகள் உள்ளன. அவை தொடர்பில் அதிக அவதானம் செலுத் தப்படவேண்டும்.
Average Rating