பொலிசார் மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற அகதி: கடுமையான தண்டனை வழங்கிய நீதிமன்றம்..!!

Read Time:2 Minute, 42 Second

images (4)சுவிட்சர்லாந்து நாட்டில் சட்டவிரோதமாக நுழைந்த அகதி ஒருவர் பொலிசார் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சுவிஸின் லவ்சான் நகரில் கடந்த 2014ம் ஆண்டு மே 10-ம் திகதி பொலிசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

அப்போது, மர்ம நபர் ஒருவர் பயணிகளுடன் கார் ஒன்றை திருடிக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டதாக அவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதே சமயம், பொலிசார் காரில் அமர்ந்திருந்த திசையை நோக்கி அந்த மர்ம கார் வேகமாக வந்துள்ளது.

உடனே வாகனத்திலிருந்து இறங்கிய பொலிஸ் அதிகாரி ஒருவர் ‘காரை நிறுத்துங்கள். நான் பொலிஸ்’ என கூறி தனது அடையாள அட்டையையும் தூக்கி காட்டியுள்ளார்.

ஆனால், இதனை கண்டுகொள்ளாத அந்த ஓட்டுனர் பொலிசார் மீது காரை ஏற்றும் நோக்கில் பாய்ந்து வந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியுற்ற பொலிசார் துப்பாக்கியை எடுத்து காரின் முன்பகுதியை சுட்டுவிட்டு காரில் மோதாமல் தப்பி விடுகிறார்.

ஆனால், கீழே விழுந்த பொலிசார் முயற்சியை கைவிடாமல் காரின் பின் சக்கரத்தை சுட்டு வீழ்த்தியுள்ளார்.

இதனால் சிறிது தூரம் சென்ற கார் ஒரு சுவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆனால், ஓட்டுனர் தப்பிட, அவரை மறுநாள் பொலிசார் கைது செய்தனர்.

ஓட்டுனரிடம் நடத்திய விசாரணையில் அவர் துனிசியா நாட்டை சேர்ந்தவர் என்றும், சுவிஸில் புகலிடம் கோர சட்டவிரோதமாக நுழைந்திருப்பதும் தெரியவந்தது.

இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

குற்றவாளி மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 7 வருடங்கள் சிறை தண்டனை விதிப்பதாக உத்தரவிட்டு நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெளிநாடுகளில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் ரகசிய முதலீடு செய்தனரா? விசாரணை நடத்த பிரதமர் மோடி உத்தரவு..!!
Next post மற்றொரு பெண்ணுடன் தொடர்புகொண்டிருந்த கணவர் மீது மனைவி துப்பாக்கிச் சூடு; கணவரின் விதையை குண்டு தாக்கியது..!!