திருமணம் முடிந்த பெண்களுக்கு பெரியோர்கள் கூறும் தலையணை மந்திரம்..!!

Read Time:3 Minute, 30 Second

timthumbமுந்தைய தலைமுறையில் முழுமையான தாம்பத்தியதிற்கு தம்பதிகளின் அன்யோனியம் மிக முக்கியம், தலையணை மந்திரத்துக்கு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் சக்தி இருந்திருக்கலாம்,

ஒரு காலத்தில்…! அன்றைய பெரியோர்கள் திருமணம் முடிந்த பெண்களுக்கு சிலவற்றை அறிவுறுத்தினார்கள்…

ஆண்கள் கவனம் வேறு பக்கம் சிதறிவிட கூடாது என்பதற்காக சில வார்த்தைகளை சொல்லி வைத்தார்கள். நன்கு கவனிக்கவும்…! வார்த்தைகள் தான் தலையணை மந்திரங்கள் இல்லை.

இவை கால போக்கில் ஆணை வசியபடுத்தும் ஒரு கவர்ச்சி ஆயுதமாக வலுபெற்று விட்டன…!!

அக்கம்பக்கம் திரும்ப விட்டுடாத, உன்னையே சுத்தி வர்ற மாதிரி பக்குவமா நடந்துக்க என்று சொன்னதின் பின்னால் சில அந்தரங்க சூட்சமங்கள் இருக்கிறது. “ஆண்களின் உடம்பில் வயதாகி ஆயுள் முடியும் வரை கூட விந்து அணுக்கள் சுரக்கும்,

எனவே அதன் உந்துதலால் அவர்கள் பெண்ணுடன் இறுதிவரை உறவு கொள்ளவே விரும்புவார்கள். இதற்கு மனைவி நீ சரியாய் ஒத்துழைக்கலைனா வீட்டுக்காரன் அடுத்த பக்கம் திரும்பிவிடுவான்…

அதனால உன் அழகால, பேச்சால, வருடுதலால், தொடுதலால், இன்னும் பிறவற்றால் கணவனை பார்த்துக்கோ, கைக்குள்ள போட்டு வச்சுக்க” என்பது தான் அவர்கள் சொன்னதின் உட்கருத்து.

ஆனால் இன்று அதற்கு வாய்ப்புகள் மிக குறைவு. இன்றைய குடும்பங்கள் இருக்கின்ற சூழல், பொருளாதாரத்தை நோக்கிய ஓட்டம், சுயநலம் மிகுந்த மனிதர்கள், கவனத்தை திசை திருப்பகூடிய ஊடகங்களின் ஆக்கிரமிப்பு, தொலை தொடர்பு வசதிகள், பெருகிவிட்ட ஆடம்பர மோகம்,

இவற்றின் பிடியில் சிக்கிகொண்ட தம்பதிகள், தங்களுக்கு என்று செலவிடும் நேரம் மிக மிக குறைந்துவிட்டது. அவர்களின் அந்தரங்கமும் அள்ளி தெளித்த கோலம் போன்றே ஆகிவிட்டது !

அகத்தில் அன்பில்லாத பெண்டிரை மனதாலும் தீண்டேன் என ஆண்கள் உணரும்வரை அவர்களுக்கு ஏற்றபடி இன்றைய பெண்கள் மாறித்தான் ஆகவேண்டும்…!!

இப்போதைய தலையணை மந்திரம்,

* கணவனின் குடும்பத்தினரை கணவனை விட்டு தூர தள்ளி வைக்க, முக்கியமாக கணவனின் பெற்றோர்களை…

* தன் தனிப்பட்ட விருப்பத்தை, தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள

* தன் தவறுகளை கண்டுகொள்ளாமல் இருக்க

* தன் சுயத்தை திருப்திபடுத்த

* பெருமைக்காக

இவை போன்றவைகளுக்காக பயன்படுகிறது. குடும்பத்தின் நல்வாழ்வுக்காக என்பது இப்போது மிக குறைவு !

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனாவில் காட்டுத்தீயில் சிக்கி வனத்துறை அதிகாரிகள் 2 பேர் பலி…!!
Next post தவறி வந்த அழைப்பினால் மூன்று கொடூர காமுகர்களின் பாலியல் வலையில் சிக்கிய பெண்..!!