அவசர தபாலுடன் 300 மைல்கள் பயணம் செய்த தபால்காரர்: நடந்தது என்ன..?

Read Time:2 Minute, 31 Second

postoffice_worker_002பிரித்தானியாவில் தபால்காரர் ஒருவர் கடிதத்தின் அவசரம் கருதி 300 மைல்கள் பயணம் செய்துள்ள சம்பவம் பாராட்டை குவித்துள்ளது.
பிரித்தானியாவின் கார்ன்வால் பகுதியில் அமைந்துள்ள குட்டி கிராம பிரதேசம் Stratton. இங்கு தாபால்காரராக செயல்பட்டு வருபவர் 26 வயதான டேவிட் ஷெப்பர்ட்.

சம்பவத்தன்று இவரது பார்வைக்கு அவசர தபால் ஒன்று சிக்கியுள்ளது. அதில் கண்டிப்பாக அடுத்த நாள் உரியவரிடம் சேர்த்துவிடவும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் அன்றைய தினம் அனுப்ப வேண்டிய தபால்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைத்தாகிவிட்டது.

குறிப்பிட்ட தபாலின் முகவரி 200 மைல்களுக்கும் மேல் தொலைவில் இருக்கும் பகுதி என்பதும், அந்த தபால் ஒரு கடவுச்சீட்டு எனவும் டேவிட்டுக்கு தெரிய வந்தது.

டேவிட்டுக்கு வேறு சிந்தனைகள் எதுவும் ஓடவில்லை, இரவு 10 மணிக்கு வீடு வந்து சேர்ந்ததும் ரயில் நேரப் பட்டியலை புரட்டிய அவர் காலை 5:30 மணிக்கு லண்டன் Paddington ரயில் நிலையத்தில் வந்து சேரும் ரயில் நள்ளிரவு 1 மணிக்கு புறப்பட இருப்பதை அறிந்தார்.

உடனடியாக தமது காரில் புறப்பட்ட டேவிட் குறிப்பிட்ட நேரத்தில் Exeter ரயில் நிலையம் வந்து சேர்ந்தார். அங்கிருந்து அதிகாலையில் லண்டன் வந்தடைந்த அவர்,

தபால் கொண்டு சேர்க்கவேண்டிய Rye பகுதிக்கு அங்கிருந்து சுரங்க ரயிலில் புறப்பட்டு சம்பந்தப்பட்ட நபரது முகவரிக்கு காலை 8 மணிக்கு தபாலை சேர்த்துள்ளார்.

டேவிடின் இந்த அரிய சேவை மனப்பான்மையை மிகவும் பாராட்டியுள்ள மன்ரோ குடும்பத்தினர் அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் Champagne ஒன்றை பரிசளித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விருகம்பாக்கத்தில் 10–ம் வகுப்பு மாணவி மற்றும் தாய் தற்கொலை…!!
Next post 2 பெண்களை வெட்டிக்கொன்ற தொழிலாளிக்கு தூக்கு தண்டனை: கோவை கோர்ட்டு தீர்ப்பு..!!