சிரியா, ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை:
லெபனான்இஸ்ரேல் சண்டையில், சிரியாவும், ஈரானும் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஹிஸ்புல்லா படைகளுக்கு ஈரானும் சிரியாவும் ஆயுதங்களைத் தந்து வருவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் சிரியாவைத் தாக்க வேண்டும் என இஸ்ரேலில் குரல்கள் எழுந்துள்ளன.
ஆனால், லெபனானைத் தாண்டி இஸ்ரேல் படைகள் முன்னேறினால் கடும் விளைவுகள் ஏற்படும் என சிரியா எச்சரித்துள்ளது. சிரியாவைத் தாக்கினால் ஈரான் உள்ளிட்ட பிற நாடுகளும் தனக்கு எதிராக களமிறங்கும் என்ற அச்சம் இஸ்ரேலுக்கு உள்ளது. இதனால் இப்போதைக்கு சிரியா மீது எந்தத் தாக்குதலும் நடத்தப் போவதில்லை என இஸ்ரேல் அறிவித்துவிட்டது.
அமெரிக்க வெளியுறவுஅமைச்சர் காண்டலீசா ரைஸ் கூறுகையில், இந்தப் பிரச்சினை இஸ்ரேலுக்கும், லெபனானுக்கும் இடையிலானது. இதை இவர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் ஹிஸ்புல்லா படையினருக்கு சிரியா ஆயுதங்களை சப்ளை செய்கிறது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதேபோல ஈரானும் லெபனானுக்கு உதவுகிறது.
இதை இரு நாடுகளும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இரு நாடுகளும் சர்வதேச சமுதாயத்திலிருந்து மேலும் தனிமைப்படுத்தப்படும். போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில் சிரியா, ஈரானின் செயல்கள் கண்டனத்துக்குரியவை.
ஹிஸ்புல்லா படையினர் உடனடியாக தெற்கு லெபனான் எல்லைப் பகுதியிலிருந்து வெளியேற வேண்டும், ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்ற இஸ்ரேலின் கோரிக்கையில் எந்த தவறும் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை என்றார் ரைஸ்.
அமெரிக்காவுக்கு சிரியா எச்சரிக்கை: இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகள் குறித்த தனது கொள்கையை அமெரிக்கா மாற்றிக் கொள்ளாவிட்டால், இந்தப் பிராந்தியமே எரிவதை தவிர்க்க முடியாது என இங்கிலாந்துக்கான சிரியா நாட்டுத் தூதர் சமி கியாமி எச்சரித்துள்ளார்.
பிபிசி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், சிரியா தலைநநிகர் டமாஸ்கஸுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரைஸ் வர வேண்டும். இங்குள்ள தலைவர்களுடன் பேச வேண்டும்.
சிரியாவை ஒதுக்கிவிட்டு அல்லது சிரியாவுக்கு எதிரான நிலையை எடுத்துக் கொண்டு இந்தப் பிரச்சனையை அமெரிக்காவால் தீர்க்க முடியாது என்றார்.
இதற்கிடையே, ஈரான் நாட்டு தேசிய பாதுகாப்பு சபை செயலாளர் அலி லரிஜானி சிரியா தலைநகர் டமாஸ்கஸ் வந்துள்ளார். அந் நாட்டுத் தலைவர்களுடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
விலகி நிற்குமாறு சிரியா, ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதற்கு நேர் மாறாக, ஐ.நிõ. பொதுச் செயலாளர் கோபி அன்னான், மத்திய கிழக்குப் பிரச்சினையில் சிரியாவையும், ஈரானையும் புறக்கணிக்க முடியாது. இரு நாடுகளையும் அமைதிப் பேச்சுக்களில் சேர்த்துக் கொண்டால் தான் லெபனால் இஸ்ரேல் பிரச்சனைக்கு தீர்வுகாண முடியும் என்று கூறியுள்ளார்.