உன் மனைவி எனக்கு; என் மனைவி உனக்கு : கண்ணை மறைக்கும் காதல் விளையாட்டு

Read Time:2 Minute, 42 Second

உன் மனைவி எனக்கு; என் மனைவி உனக்கு! இது தமாஷ் இல்லை… நிஜம். ஆமாம்! தன் கணவனுக்கு பாடம் கற்பிக்க ஒரு புரட்சி பெண் செய்த செயல், பெண் இனத்தையே அதிரவைத்துள்ளது. கட்டிய கணவன் வேறொரு பெண்ணுடன் ஓடி விட்டதால், ஓடிய பெண்ணின் கணவனை கை பிடித்து புரட்சி செய்துள்ளார் சோனியா என்ற இந்தப் பெண். ஆப்காரியைச் சேர்ந்தவர் சோனியா வர்மா. இவருக்கு வினோத் என்பவருடன் 2002ம் ஆண்டு திருமணம் நடந்தது. இரண்டு வயதில் ஒரு மகனும் உள்ளார். முஜிபுர் நகரில் இருந்த சுஷீல் வர்மா என்பவர் வீட்டிற்கு அடிக்கடி வினோத் சென்று வந்து கொண்டிருந்தார். சுஷீலுடைய மனைவி பேபி. இவர் இரண்டு குழந்தைகளுக்கு தாய். பேபியுடன் வினோத்துக்கு பழக்கம் ஏற்பட்டு, நெருக்கம் அதிகமானது. இதனால் திடீரென்று பேபியுடன் டிச., 10ம் தேதி வினோத் தலைமறைவானார். இது தொடர்பாக, வினோத்தின் மனைவி சோனியாவும், பேபியின் கணவன் சுஷீலும் தனித்தனியாக போலீசில் புகார் கொடுத்தனர். புகார் பதிவு செய்வது தொடர்பாக தொடர்ந்து போலீஸ் நிலையத்திற்கு அலைந்து திரிந்த சுஷீலும், சோனியாவும் ஒரு நாள் எஸ்.எஸ்.பி., அலுவலகத்தில் சந்தித்துக் கொண்டனர்.

அப்போது திடீரென்று சோனியா, “போலீஸ் நிலையத்திற்கு அலைந்து, அலைந்து எந்த நியாயமும் கிடைக்கவில்லை. நாம் இருவரும் ஏன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது; என் கணவருக்கும், உங்கள் மனைவிக்கும் பாடம் கற்றுத்தர வேண்டும் என்றால், நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும்’ என்று சுஷீலிடம் கூறினாள்.

இதைக் கேட்ட சுஷீல் வர்மா ஒரு நிமிடம் அதிர்ந்து போய், பிறகு, புரட்சி பெண்ணான சோனியாவின் “ஐடியா’ வுக்கு ஒப்புக்கொண்டு, உடனே தன் தாய் சத்தியவதி முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இப்போது இருவரும் சந்தோஷமாக சேர்ந்து வசிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மியூசியமாகும் சார்லி சாப்ளின் வசித்த சுவிட்சர்லாந்து நாட்டு வீடு
Next post நடுரோட்டில் பெண் தீக்குளித்து தற்கொலை