இரவு நன்றாகத் தூங்க உதவும் 5 உணவுகள்…!!

Read Time:3 Minute, 47 Second

12795260_505891239596882_1278149754107464180_n-615x410இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும், உறக்கம் வர காரணமாய் அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி தெரிந்துகொள்வோம். செர்ரி பழங்கள்: நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது நம்ம தூக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது.

இந்த கடிகாரத்தை உறக்கத்தை நெறிப்படுத்த ஆணையிடும் திறனுள்ள மெலடோனின் அப்படீங்கிற வேதியியல் பொருளின் இயற்கை உறைவிடம் தான் செர்ரிபழங்கள். அதனால இரவு உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இரண்டு செர்ரி பழங்களை சாப்பிட வேண்டும்.

வாழைப்பழம்: இயற்கையான தசை தளர்த்திகளான பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நம்ம வாழைப்பழத்துல நிறைய இருக்கு. அது மட்டுமல்லாமல் எல் ட்ரிப்டோபன் என்கிற அமினோ அமிலமும் வாழைப்பழத்துல இருக்குது. இந்த எல் ட்ரிப்டோபான் அமினோ அமிலமானது மூளைக்குள்ளே 5 HTP ஒரு என்கிற ரசாயனமாக மாறிவிடும். அதன் பிறகு இந்த 5 HTP-யானது செரடோனின் மற்றும் மெலடோனினாக மாறிவிடும்.

டோஸ்ட்: நாம் பொதுவாக காலை உணவாக அதிகம் சாப்பிடுகிற டோஸ்டுக்கும் தூக்கத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்றாங்க விஞ்ஞானிகள். மாவுச்சத்து நிறைந்த உணவுகள் எல்லாமே இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டும். இந்த இன்சுலின் ஹார்மோன் உறக்கத்தை தூண்டக்கூடியதாகும்.

மூளையிலிருந்து வெளியாகும் இவ்விரு ரசாயனங்களும் உறக்கத்தை தூண்டிவிடும் திறன் கொண்டவை ஆகும். ஓட் மீல்: ஓட்ஸ் கஞ்சி ரத்தத்தில் இருக்கிற சர்க்கரை அளவை அதிகப்படுத்தி அந்த சர்க்கரை இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டிவிட அதன் விளைவாக உறக்கம் தூண்டப்படும்.

கதகதப்பான பால்: உறக்கம் தரும் இயற்கை உணவுகள் தரவரிசையில் நாம் இன்றைக்கு பார்த்த மேலே இருக்கிற 4 உணவுகளுமே புதுசுதான். ஆனா பால் மட்டும் பழசு.

ஆமாம் சின்ன வயசுலேர்ந்து ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு படுத்தா நல்லா தூக்கம் வரும் அப்படீன்னு அம்மா காய்ச்சின பாலை கொடுப்பாங்க இல்லையா? ஆனா நம்ம அம்மாவுக்கு இந்த பால்ல இருக்குற எந்த வேதி‌யியல் மூலப்பொருள் காரணமாக நமக்கு தூக்கம் வருதுன்னு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை.

வாழைப்பழத்தில் இருக்கும் எல் ட்ரிப்டோபன் அமினோ அமிலம் பாலிலும் இருக்கிறது, அதுதான் செரடோனின் உற்பத்தி மூலமாக உறக்கம் வரவைக்கும். அதுமட்டுமில்லாமல் பாலில் அதிக கால்சியம் இருப்பது உறக்கத்தை தூண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இனிமே யாராவது செல்பி எடுக்கிறோம் என்று பந்தா காட்டுவீங்களா…?
Next post படுக்கையறையில் ஆண்களிடம் அதிக நெருக்கத்தை எதிர்பார்க்கும் பெண்கள்…!!