நாம் தினமும் பயன்படுத்தும் சோப்பில் கூட இவ்வளவு பிரச்சனையா…?

Read Time:2 Minute, 4 Second

bath_soap_002.w540நிறத்துக்காக சாயங்கள், மணத்துக்காக வாசனைப் பொருட்கள், திடப்பொருளாக மாறுவதற்காக சோடியம் ஹைட்ராக்ஸைடு என சோப் என்பதே வேதிப்பொருட்களின் கூட்டு வடிவம்தான்.சோடியம் ஹைட்ராக்ஸைடு கலந்தால்தான் கட்டியாக சோப் கிடைக்கும். சோடியம் லாரெல் சல்பேட் கலந்தால்தான் நுரை வரும்.

சோப் தயாரிப்பில் பயன்படும் விலங்குகளின் கொழுப்பு அமிலங்களின் காரத்தன்மையை மாற்ற க்ளிசரால் சேர்க்க வேண்டும். நம் சருமத்தின் ஈரப்பதத்துக்காகவும், மிருதுவாக இருப்பதற்காகவும் மாய்ஸ்சரைஸிங் ஏஜென்ட் கலப்பார்கள். இதுபோல பல வேதிப்பொருட்களால் தயாரிக்கப்படும் சோப்பின் இறுதி வடிவம் பழுப்பு நிறமாக இருக்கும்.

இதன் நிறத்தை மறைப்பதற்காக பல நிறமிகளை சேர்ப்பார்கள். அப்போதுதான் நம்மைக் கவர்கிற நிறத்தில் சோப் தோற்றம் அளிக்கும். குளிக்கிற சோப்பில் சோடியம் ஹைட்ராக்ஸைடு சேர்ப்பதுபோல டிடர்ஜென்ட்களில் சோடியம் கார்பனேட் என்ற அழுக்கு நீக்கியைச் சேர்க்கிறார்கள்.

இந்த வேதிப்பொருட்கள் உடலில் அரிப்பு, அலர்ஜி, தலைவலி போன்றவற்றை உண்டாக்கலாம். சிலர் சோப்பினால்தான் தலைவலி வருகிறது என்பது தெரியாமல் மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். சிலருக்கு நீண்ட நாட்கள் கழித்து சுவாசம் தொடர்பான கோளாறுகள் வரவும் வாய்ப்புண்டு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடிபோதையில் 4 வயது பேத்தியை தொலைத்த பாட்டி: போலீசார் மீட்டு தந்தையிடம் ஒப்படைத்தனர்..!!
Next post நண்பனின் மனைவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது..!!