கொலஸ்ட்ரோலுக்கு என்ன காரணம்?…!!

Read Time:2 Minute, 32 Second

timthumbநமது உடல் கொலஸ்ட்ரோலைத் தன்­னி­லி­ருந்தே உற்­பத்தி செய்து கொள்­கி­றது.
நம் கல்­லீரல் நாளொன்­றுக்குச் சுமார் 1000 மில்­லி­கி­ராம்கள் வரை கொலஸ்ட்ரோலை உற்­பத்தி செய்­கி­றது.

கல்­லீ­ரலும் மற்ற செல்­களும் சேர்ந்து இரத்­தத்தின் மொத்த கொலஸ்ட்ரோல் அளவில் 75% உற்­பத்தி செய்­கின்­றன.

25% கொலஸ்ட்ரோல் நாம் உட்­கொள்ளும் உணவு வகை­க­ளான முட்டைக் கரு, மாமிசம், கோழி­யி­றைச்சி, பால் மற்றும் பால் தயா­ரிப்­பு­க­ளி­லிருந்து கிடைக்­கி­றது.

* அதிக அள­வி­லான கொழுப்­புகள் கலந்த உணவுப் பழக்கம்

* அதிக மாமிச உணவு உண்­பது

* அதீத உடற்­ப­ருமன் (Obesity)

* உடல் இயக்கக் குறை­வான பணிகள்

* உடற்­ப­யிற்­சி­யின்மை

* அதிக தூக்கம்

* புகைப் பழக்கம்

* மன அழுத்தம்

* மதுப்­ப­ழக்கம்

* சக்­க­ரைநோய், சிறு­நீ­ரகம் மற்றும் தைெராய்ட் சுரப்பி நோய்கள்.

* கருத்­தடை மாத்­தி­ரைகள்

*பெற்­றோர்­க­ளுக்கு மிகை கொலஸ்ட்ரோல் இருக்­கு­மானால் அதற்கு கார­ண­மான ஜீன்­களை நீங்­களும் பெற்­றி­ருக்கக் கூடும்.

பொது­வாக, இரத்­தத்தில் அதிக அளவில் கொலஸ்ட்.ேரால் இருப்­ப­தற்­கான எந்த ஓர் அறி­கு­றி­யையும் ஏற்­ப­டுத்­து­வ­தில்லை. ஆகை­யால்தான் அது “அமை­தி­யான உயிர்க்­கொல்லி” என்று அறி­யப்­ப­டு­கி­றது.

உடல் பருமன் இல்­லா­த­வர்­க­ளுக்கு இரத்­தத்தில் கொலஸ்ட்.ேரால் அதிகம் இருக்­காது என்று சொல்ல முடி­யாது. யாருக்கும் வரலாம். இரத்த பரிசோதனை செய்து பார்த்தால் தான் தெரிய வரும்.

இரத்­தத்தில் உள்ள கொலஸ்ட்ரோலின் அளவு என்­பது, 12 மணி நேரம் ஏதும் உட்­கொள்­ளாத நிலையில் காலையில் எடுக்­கப்­பட்ட மாதிரி (sample) இரத்­தத்­தி­லி­ருந்து கணக்­கி­டப்­ப­டு­கி­றது. அதிலும் ‘லிபோபுரோட்டீன் ப்ரொஃபைல்’ (lipoprotein profile) எனும் இரத்தப் பரிசோதனை செய்வது மிகவும் சிறந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் விபசாரம்: 08 பேர் கைது..!!
Next post யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைக் காவலரணில் தமிழினி!! (“ஒரு கூர்வாளின் நிழலில்” இருந்து… பாகம்-2)