மின்வெட்டு அறிவிப்பால் மக்கள் மத்தியில் குழப்பம்..!!

Read Time:4 Minute, 27 Second

downloadநாட­ளா­விய ரீதியில் நேற்று நள்­ளி­ரவு முதல் அமு­லுக்கு வரும் வகையில் மின்துண்­டிப்பு அமுல்­ப­டுத்­தப்­படும் என இலங்கை மின்­சார சபை­யினால் அறி­விக்­கப்­பட்ட நிலையில் அதனை சில மணி­நே­ரங்­களில் மின் வலு மற்றும் புதுப்­பிக்­கத்­தக்க அமைச்சு நிரா­க­ரித்­தது. இதனால் நேற்று மாலை நாட்டு மக்­க­ளி­டையே குழப்­ப­க­ர­மான நிலை ஏற்­பட்­டது. மின்­வெட்டு அமு­லா­குமா அமு­லுக்கு வராதா என்ற கேள்­வி­க­ளுடன் மக்கள் குழப்­பத்­துடன் காணப்­பட்­டனர்.

நான்கு வல­யங்­க­ளாக பிரிக்­க­ப்­பட்டு மின்­துண்­டிப்பு முன்­னெ­டுக்­கப்­படும் என நேற்று மாலை இலங்கை மின்­சார சபை­யினால் விஷேட மின் வெட்டு பட்­டியல் ஒன்று வெளி­யி­டப்­பட்­டது. இந்த நிலை­யி­லேயே

அந்த பட்­டியல் அமுல் செய்­யப்­ப­டாது என மின் வலு மற்றும் புதுப்­பிக்­கத்­தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்­ப­லா­பிட்­டிய அறி­வித்தார்

இது இவ்­வாறு இருக்க அமைச்சர் மின் தடை ஏற்­ப­டாது என கூறிய போதும் நேற்று மாலை­யாகும் போதும், கம்­பஹா மற்றும் கண்டி பகு­தி­களின் பல பகு­தி­க­ளிலும் மின் வெட்டு மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக பொது மக்கள் தெரி­வித்­தனர்.

மின்­சார சபையின் பட்­டியல்

நாட­ளா­விய ரீதியில் தினமும் மூன்று மணி நேரம் மின் வெட்­டினை அமுல் செய்ய இலங்கை மின்­சார சபை தீர்­மா­னித்­துள்­ள­தாக முன்­ன­தாக அந்த சபை விடுத்த அறி­வித்­தலில் குறிப்­பி­டப்­பட்­டது. கொழும்பு மா நகர சபையின் எல்­லைக்கு உட்­பட்ட பிர­தே­சங்­களைத் தவிர நாட­ளா­விய ரீதியில் ஏனைய பிர­தே­சங்கள் ஏ, பி, சி, டி, என நான்கு வல­யங்­க­ளாக பிரிக்­கப்­பட்டு இந்த மின் வெட்டு அமுல் செய்­யப்­படும். நேற்று நள்­ளி­ரவு முதல் முதல் எதிர்­வரும் மார்ச் 31 ஆம் திகதி வரை இந்த மூன்று மணி நேர மின் வெட்டு அமுலில் இருக்கும் எனவும் பகல் வேளையில் இரு மணி நேரமும் இரவில் ஒரு மணி நேர­மு­மா­காக மூன்று மணி நேரத்­துக்கு ஒவ்­வொரு வல­யத்­திலும் மின் வெட்டு அமுல் செய்­யப்­படும் எனவும் இலங்கை மின்­சார சபை தெரி­வித்­தி­ருந்­தது. .

அதன்­படி ஏ வல­யத்தில் சேர்க்­கப்­படும் பிர­தே­சங்­களில் ஒவ்­வொரு நாளும் காலை 9.00 மணி தொடக்கம் முற்­பகல் 11.00 மணி வரை­யிலும் பின்னர் மாலை 6.40 மணி தொடக்கம் இரவு 7.40 மணி வரை­யிலும் மின் துண்­டிப்பு செய்­யப்­படும். பீ வலய பிர­தே­சங்­களில் முற்­பகல் 11.00 மணி முதல் பிற்­பகல் 1.00 மணி வரை­யிலும் பின்னர் இரவு 7.40 மணி முதல் இரவு 8.30 மணி வரை­யிலும் மின் துண்­டிப்பு செய்­யப்­ப­ட­வுள்­ளது. சி வல­யத்­துக்கு உட்­படும் பிர­தே­சங்­களில் பிற்­பகல் 1.00 மணி முதல் பிற்­பகல் 3.00 மணி வரை­யிலும் பின்னர் மாலை 6.40 மணி முதல் இரவு 7.40 மணி வரை­யிலும் மின் துண்­டிப்பு செய்­யப்­ப­ட­வுள்­ளது. டி வல­யத்­துக்கு உட்­பட்ட பகு­தி­களில் பிற்­பகல் 3.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை­யிலும் பின்னர் இரவு 7.40 மணி முதல் இரவு 8.30 மணி வரை­யிலும் மின் துன்­டிப்பு செய்­யப்­படும் என மின்­சார சபை­யினால் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 2 பேர் பலி…!!
Next post வாகனங்கள் செலுத்தும் போது கையடக்கத் தொலைபேசி பாவனை முற்றாக தடை..!!