ஆப்கானிஸ்தானில் பாராளுமன்ற கட்டிடம் மீது ராக்கெட் வீசி தாக்குதல்: தீவிரவாதிகள் அட்டூழியம்…!!

Read Time:1 Minute, 51 Second

0b765d9e-12bf-49d9-b8e9-3b12f9f6d075_S_secvpfஆப்கானிஸ்தானில் பாராளுமன்ற கட்டிடம் மீது தீவிரவாதிகள் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் பாராளுமன்ற கட்டிடம் உள்ளது. இது இந்திய அரசால் கட்டி கொடுக்கப்பட்டது. இந்த புதிய கட்டிடத்தை கடந்த டிசம்பரில் பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்தார்.

தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருந்தும் இன்று காலை பாராளுமன்ற கட்டிடம் மீது தீவிரவாதிகள் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே பாராளுமன்றத்தில் இருந்த எம்.பி.க்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

இத்தாக்குதலில் யாருக்கும் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

இதற்கிடையே, தாக்குதல் நடத்தப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தில் பணிகள் இன்னும் முழுமையடையவில்லை. தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தாக்குதலால் அங்கிருந்து புகை வந்த வண்ணம் உள்ளது.

தாக்குதலில் அங்கு தங்கியிருக்கும் இந்திய என்ஜினீயர்கள் யாருக்கும் காயம் எதுவும் இல்லை. பாதுகாப்புடன் உள்ளனர் என ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லாகூர் தாக்குதலை அடுத்து பஞ்சாப்பில் மிகப் பெரிய அளவில் ராணுவ நடவடிக்கையை தொடங்கியது பாகிஸ்தான்…!!
Next post அமெரிக்காவில் குடிபோதையில் இருந்த துணை விமானி கைது: பயணிகள் விமானம் ரத்து….!!