டோக்கியோவில் இருந்து ஒக்காய்டோ தீவுக்கு முதல் முறையாக புல்லட் ரெயில் இயக்கம்…!!

Read Time:2 Minute, 3 Second

6e6e33f8-e5c5-46b5-99fb-32ac67fd7a50_S_secvpfஜப்பானில் டோக்கியோ நகரத்தில் இருந்து ஒக்குட்டோ-அக்கோடெட்-சின் வழியாக ஒக்காய்டோ தீவுக்கு முதல்முறையாக புல்லட் ரெயில் இன்று இயக்கப்பட்டது. மணிக்கு 162 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ரெயில் உலகின் நீளமான சுரங்கப்பாதையான செய்கன் சுரங்கம் மற்றும் துறைமுக நகரமான அக்கோடெட் வழியாக சென்றடையும்.

சென்ற ஆண்டு மட்டும் 2 கோடி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ள ஜப்பான் நாடு முழுவதும் உள்ள சுற்றுலா இடங்களுக்கு புல்லட் ரெயில் சேவைகளை விரிவுபடுத்துவதில் ஆர்வமாக செயல்பட்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக தற்போது ஒக்காய்டோ தீவுக்கு அதிவேக ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ரெயில் இயக்கப்படும் இதே பாதையில் விமானத்தில் சென்றால் 90 நிமிடங்களில் சென்று விடலாம். 1,200 கி.மீ தூரத்தை நான்கரை மணிநேரத்தில் கடந்துவிடுகிறது இந்த புதிய புல்லட் ரெயில். தற்போது டோக்கியோவில் இருந்து ஒக்காய்டோ தீவுக்கு இந்த ரெயிலில் சென்றடைய 200 டாலர்கள் (22,690 யென்) வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த ரெயிலில் முதல்முறையாக செல்வதற்கான டிக்கெட் புக்கிங் சென்ற மாதமே அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது, வெறும் 25 நொடிகளிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தது நினைவு கூரத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொசுக்கள் மட்டுமின்றி, பறவைகள் மூலம் பரவும் மலேரியா: புதிய ஆய்வில் தகவல்…!!
Next post ஈராக்கில் கால்பந்து மைதானத்தில் தற்கொலை தீவிரவாதி தாக்குதல்: 30 பேர் பலி…!!