பிடிச்சிருக்கு விழாவில் பி.சுசீலா கலகலப்பு -காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய ஹீரோ.!!!

Read Time:3 Minute, 10 Second

pidichirukku_audiorelease2.jpgகோலிவுட்டில் திடீரென்று பாசமழை பொழிய ஆரம்பித்திருக்கிறார்கள் மூத்த கலைஞர்கள் மீது! வெள்ளித்திரை விழாவில் எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தியை கௌரவித்தார்கள். அந்த மழையின் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் பிடிச்சிருக்கு பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பி.சுசீலா, எஸ்.ஜானகி, எஸ்.பி.பால சுப்ரமணியம் இவர்களுடன் எம்.எஸ்.வி. ஏ.வெங்கடேஷ், லிங்குசாமி இவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கனகு என்பவர் இயக்கும் படம்தான் பிடிச்சிருக்கு. படத்தின் இசையமைப்பாளர் மனு ரமேஷன். இவருடைய அப்பா ரமேஷன் நாயர் எழுதி இவர் இசையமைத்த பாடலை முதலில் வெளியிட்டார்கள். இந்த அன்பான அப்பா மலையாளி என்றாலும், திருக்குறளையும், சிலப்பதிகாரத்தையும் மலையாளத்தில் மொழி பெயர்த்தவர். ஒவ்வொரு பாடலாக வெளியிட்டார்களே தவிர, ஒரு பாடலையும் திரையிடவில்லை. கேட்க மட்டுமே முடிந்தது. அண்ணாமலை படப்பிடிப்பு நேரத்தில் ஒரு சின்ன பையனை பாலசந்தர் ஆபிசில் பார்த்திருக்கிறேன். கீ போர்டை வைத்துக் கொண்டு எதையாவது செய்து கொண்டிருப்பான். நானும் சின்ன பையன்தானே, விளையாடிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்திருக்கிறேன். ஆனால், அந்த பையன்தான் உலகத்தையே தன் வசப்படுத்தியிருக்கிற ஏ.ஆர்.ரஹ்மான். இதே மேடையில் ரஹ்மான் மாதிரி ஒரு பையனை பார்க்கிறேன் என்று இசையமைப்பாளர் மனு ரமேஷனை பாராட்டினார் சுரேஷ்கிருஷ்ணா. இப்படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிற எஸ்.பி.பி யும் இசையமைப்பாளரை எக்கச்சக்கமாக புகழ்ந்தார். பி.சுசீலாவின் கலகலப்பான பேச்சு அரங்கத்தை அதிர வைத்தது. நிலவே மலரே படத்தில் இவர் பாடிய ஒரு பாடலுக்கு தபேலா இசைத்தவர் இந்த விழாவுக்கு வந்திருந்தார். அவரை ”எழுந்திருப்பா” என்று உரிமையோடு கட்டளையிட்டவர், அந்த பாடலை பாடி ரெக்கார்டிங் நேரத்து அனுபவங்களை பகிர்ந்து கொண்டது இனிமை. ஆண்டவன் அருளால் நான் விரும்பிய எல்லாமே கிடைத்து வருகிறது என்று குறிப்பிட்ட படத்தின் நாயகன் அசோக், மேடையில் பி.சுசீலா, எஸ்.பி.பி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டது நெகிழ்ச்சி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பெற்றோரிடம் வளரும் குழந்தைகளை விட தத்துப் பெற்றோரிடம் வளரும் குழந்தைகளுக்கு புத்திக் கூர்மையின் அளவு குறைவு
Next post நக்சலைட்டுகளுக்கு உதவிய சென்னை என்ஜினீயர் கைது கேரளாவில் பிடிபட்டார்