பேரன், பேத்திகளின் பரிதாப நிலையை கருத்தில் கொண்டு மகனை கொன்ற தந்தைக்கு கீழ்கோர்ட்டு விதித்த ஆயுள்தண்டனை ரத்து ஐகோர்ட்டு உத்தரவு
பேரன், பேத்திகளின் பரிதாப நிலையை கருத்தில் கொண்டு மகனை கொன்ற தந்தைக்கு கீழ்கோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மகனை கொன்ற தந்தை தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் மாயாண்டி(வயது 68). இவரது மகன் பாஸ்கர். சொத்துதகராறில் பாஸ்கர், தனது தந்தை மாயாண்டியை தகாத இடத்தில் மிதித்து கீழே தள்ளி விட்டாராம். இதில் ஆத்திரம் அடைந்த மாயாண்டி, பாஸ்கரை வேல்கம்பால் குத்தி கொலை செய்தார். இந்த வழக்கை விசாரித்த மதுரை செசன்சு கோர்ட்டு, மாயாண்டிக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து மாயாண்டி மதுரை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். விடுதலை அப்பீல் வழக்கை நீதிபதிகள் பிரபாஸ்ரீதேவன், நாகமுத்து ஆகியோர் அடங்கிய டிவிஷன் விசாரித்தது. விசாரணையின் போது, மாயாண்டியின் பேரன் ரஞ்சித்(வயது 10), ரேவதி(8) ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகி, ஜாமீனில் உள்ள தாத்தா மாயாண்டி மற்றும் பாட்டி அரவணைப்பில் தாங்கள் இருந்து வருவதால், தாத்தா மாயாண்டியை விடுவிக்க வேண்டும் என்று நீதிபதிகளிடம், கேட்டுக்கொண்டனர். இதை கருணையுடன் பரிசீலித்த நீதிபதிகள், மாயாண்டியை விடுதலை செய்து உத்தரவிட்டனர். தீர்ப்பில் அவர்கள் கூறி இருப்பதாவது:-
வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த கொலை நடக்கவில்லை. அந்த சமயத்தில் ஏற்பட்ட கோபத்தால் ஒரு நிமிடத்தில் சம்பவம் நடந்து விட்டது என்று மனுதாரர் மாயாண்டி வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் அந்த சம்பவத்தை நினைத்து வருந்தி இருப்பதே அவருக்கு பெரிய தண்டனை. மாயாண்டிக்கு அளிக்கப்பட்டுள்ள ஜெயில் தண்டனையால் அவரது பேரன், பேத்தி பரிதாப நிலையில் உள்ளனர்.
எனவே கருணை அடிப்படையில் நியாயம் வழங்க வேண்டியது அவசியமாகிறது. எனவே மாயாண்டி மீதான கொலை குற்றச்சாட்டை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தாக்கிய குற்றமாக மாற்றி அவருக்கு கீழ்கோர்ட்டு விதித்த ஆயுள்தண்டனையை ரத்து செய்து உத்தரவிடுகிறோம்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...