வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக கரும்பு சர்க்கரை பயன்படுத்துவதால் உடலில் உண்டாகும் மாற்றங்கள்…!!

Read Time:5 Minute, 11 Second

23-1458709158-1healthbenefitsofreplacingwhitesugarwithjaggeryinfoodநமது பாரம்பரியத்தில் வெள்ளை சர்க்கரை என்பது இடையே உட்புகுந்த ஒரு விஷயமாகும். ஆரம்பக் காலத்தில் பனங்கற்கண்டு, கருப்பட்டி / வெல்லம் / கரும்பு சர்க்கரையை தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்த காலத்தில் இப்போது போல உடல் பருமனோ, நீரிழிவு நோயோ இருந்ததாக யாரும் கேள்விப்பட்டதே இல்லை.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த அன்றாடம் பின்பற்ற வேண்டிய 8 பழக்கங்கள்! நீரிழிவு என்பது பரம்பரை வியாதி என்பது மாறி காய்ச்சல், சளி போல அனைவருக்கும் உண்டாக காரணமாக இருப்பதே இந்த வெள்ளை சர்க்கரை தான்.

உணவில் நிற வேறுபாடு ஏற்பட்ட பிறகு தான் நமது உடலிலும், உடல் நலத்திலும் நிறைய வேறுபாடுகள் உண்டாக ஆரம்பித்தன…

கல்லீரல் சுத்திகரிப்பு

வெள்ளை சர்க்கரை ஃபிரக்டோஸ் அளவு வெள்ளை சர்க்கரையில் அதிகம். இது கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதற்கு காரணியாக இருக்கிறது. இதனால் கல்லீரல் செயல்திறன் பாதிப்பு அதிகரிக்கிறது.

கரும்பு சர்க்கரை

உங்கள் கல்லீரல் மட்டுமின்றி உடலில் இருக்கும் நச்சுக்களையும் போக்கி சுத்திகரிப்பு செய்ய கரும்பு சர்க்கரை உதவுகிறது.

செரிமானம்

வெள்ளை சர்க்கரை கல்லீரலில் இது தாக்கம் ஏற்படுத்துவதால் செரிமான மண்டலத்தையும் பாதிக்கிறது.

இதனால் செரிமான கோளாறுகள், மலம் கழித்தல் பிரச்சனைகள் உண்டாகவும் வெள்ளை சர்க்கரை ஓர் காரணியாக திகழ்கிறது

கரும்பு சர்க்கரை

கரும்பு சர்க்கரை குடலியக்கத்தை ஊக்குவித்து செரிமானத்தை சரி செய்ய உதவுகிறது.

வெள்ளை சர்க்கரை

வெள்ளை சர்க்கரையில் கலோரிகள் அதிகம், நீங்கள் பருகும் அனைத்து குளிர் பானங்களிலும் செயற்கை சர்க்கரையின் அளவு அதிகம். இதனால் தான் உடல்பருமன் மற்றும் நீரிழிவு பாதிப்புகள் அதிகமாக உண்டாகின்றன.

கொழுப்பு

கரும்பு சர்க்கரை கரும்பு சர்க்கரையில் கலோரிகள் குறைவு மற்றும் இது இயற்கை சர்க்கரை. நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் கூட இதை உட்கொள்ளலாம் என நாட்டு மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கொலஸ்ட்ரால்

வெள்ளை சர்க்கரை வெள்ளை சர்க்கரை உடலில் கொலஸ்ட்ராலை அதிகரித்து இதய நலனை சீர்கேடு உண்டாக்குகிறது. இதனால், இதய நோய்கள் உண்டாகும் அபாயம் அதிகரிக்கிறது.

கொலஸ்ட்ரால்

கரும்பு சர்க்கரை முன்பு நாம் கூறியது போலவே கரும்பு சர்க்கரை இயற்கையானது. இதில் கலோரிகள் குறைவு.

மற்றும் இதிலிருக்கும் இரும்பு சத்து உடல் நலத்தை ஊக்குவிக்கிறது. இதனால், உடல் மற்றும் உடல் பாகங்கள் வலுவடைகின்றன.

நோய் எதிர்ப்பு

கரும்பு சர்க்கரையில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடெண்ட் மற்றும் ஜின்க், செலினியம் போன்ற மினரல்கள் உடலில் ஏற்படும் சேதங்களை சரி செய்து, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகின்றன.

இரத்த சர்க்கரை

வெள்ளை சர்க்கரை உணவில் பயன்படுத்துவதால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. மேலும், இது கல்லீரலையும் பாதிப்பதால் உடலில் இன்சுலின் சமநிலையில் தாக்கம் ஏற்படுத்தி நீரிழிவு உண்டாக இது முக்கிய காரணியாக இருக்கிறது.

பெண்கள்

மாதவிடாய் காலத்தில் அதிக வலி அல்லது பிடிப்புகள் ஏற்படும் பெண்கள் உணவில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக கரும்பு சர்க்கரையை பயன்படுத்துங்கள். இது எண்டோர்பின் எனும் ஹார்மோனை ஊக்குவித்து வலியை குறைக்க உதவுகிறது.

கரும்பு சர்க்கரை நன்மைகள்

உடலில் நச்சுக்கள் அதிகரித்து சளி, இருமல், வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்பட்டால் நீரில் கரும்பு சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் போதுமானது. இது உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை அழிக்கும் தன்மை கொண்டுள்ளதாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞர் கைது…!!
Next post கியூபா பயணம் முடிந்து, அர்ஜெண்டினா நாட்டுக்கு சென்றார் ஒபாமா…!!