ஆலயத்தை அகற்றிய பின்னர் மர்மமாக தீப்பற்றிக் கொள்ளும் வீடு…!!

Read Time:4 Minute, 0 Second

asssஆலயத்தை அகற்றிய பின்னர் மர்மமாக தீப்பற்றிக் கொள்ளும் வீடு: சமைப்பதற்கு அரிசியை கையில் எடுத்த போதும் தீ பிடித்ததாக தெரிவிப்பு-

வென்னப்புவ லுனுவில சந்தானாபுர பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றுக்கு அருகில் நீண்டகாலமாக அமைந்திருந்த சிறிய ஆலயம் ஒன்றினை அவ் வீட்டிலுள்ள நபர்கள் உடைத்து அகற்றியதன் பின்னர் குறித்த வீட்டினுள் ஆங்காங்கே மர்மமான முறையில் தீப்பற்றிக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தானாபுர பிரதேசத்தில் 7ஏ, இல.109 இல் அமைந்துள்ள வீடு ஒன்றே இவ்வாறு தீப்பற்றிக் கொள்வதாகவும் இதனால் மக்கள் பெரிதும் பீதியடைந்துள்ளனர் என்றும் தெரியவருகிறது.

இவ் வீட்டின் உரிமையாளர்கள் கத்தோலிக்கர்கள் ஆன போதிலும் தற்போது அவ் வீட்டில் வாடகைக்கு குடியேறியுள்ள நபர்கள் சிறிய சூனியம் ஆலயம் ஒன்றினை அமைத்து வழிபட்டு வந்துள்ளனர்.

இந் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவ்வீட்டுக்கு வருகை தந்திருந்த கத்தோலிக்க போதகரொருவர் இவர்களின் செயற்பாடுகளை அவதானித்து இவ்வாறு வீட்டுக்கு முன்னால் ஆலயம் அமைத்து வழிபடுவது தமது ஆகம விதிக்களுக்கு புறம்பானவை என்றும் இச் செயற்பாடு குறித்த வீட்டின் உரிமையாளர்களை நிந்திப்பதாக அமையும் என்றும் கூறி அதனை தகர்க்குமாறு கூறியுள்ளார்.

பின்னர் வீட்டில் வசித்து வரும் நபர்கள் விருப்பமின்றி அரைமனதுடன் குறித்த ஆலயத்தினை தகர்த்துள்ளனர்.

இதன் பின்னர் தாங்கள் நோயினால் பெரிதும் அவதியுற்றதாகவும் தற்போது சில காலமாக வீட்டின் பெரும்பாலான இடங்களில் தீ பற்றிக் கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் வீட்டிலுள்ள திரைச்சீலை மற்றும் நாட்காட்டிகள் மற்றும் சமையல் பாத்திரங்கள் என வீட்டிலுள்ள பொருட்கள் பல இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாக வீட்டார் தெரிவித்தனர்.

இந் நிலையில் நேற்று முன்தினம் சமைப்பதற்காக அரிசியை கையிலெடுத்த போது அதுவும் தீப்பற்றியுள்ளது.

இவ்வாறு ஏற்படும் தீயை அணைத்து விட்டு திரும்பி பார்க்கும் போது வேறு இடத்தில் மீண்டும் தீப்பற்றுவதாகவும் நாளொன்றுக்கு குறைந்தது 10 தடவைகளேனும் இவ்வாறு தீ ஏற்படுவதாக தெரிவித்தனர்.

இதனால் பீதியடைந்த வீட்டார் நிலைமையினை கட்டுப்படுத்துவதற்காக உடனடியாக பூசாரியொருவரிடம் சென்று நடந்தவற்றை தெரிவித்த போது அவரும் பீதியடைந்து அவர்களை புறக்கணித்துவிட்டார்.

இந் நிலைமை தொடர்ந்தும் நீடிப்பதனால் குறித்த வீட்டாருக்கு தேவையான உணவுகள் அயலவர்களின் வீடுகளிலிருந்து கொண்டு வந்து கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்: பாட்டன், சிறிய தந்தை கைது..!!
Next post மீன்பிடிக்கச் சென்ற வயோதிபர் முதலையிடம் சிக்கினார்…!!