கியூபா பயணம் முடிந்து, அர்ஜெண்டினா நாட்டுக்கு சென்றார் ஒபாமா…!!

Read Time:1 Minute, 39 Second

37800f03-db17-479b-9fce-ca321a866186_S_secvpfஇரண்டுநாள் அரசுமுறை பயணமாக கியூபா நாட்டுக்கு சென்றிருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தனது சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்து அர்ஜெண்டினா நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

தனது கியூபா பயணத்தின்போது அந்நாட்டுடன் அமெரிக்காவுக்கு உள்ள சுமார் அரை நூற்றாண்டுகால பகைமையை ஒபாமா முடிவுக்கு கொண்டு வருவார் என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதிய நிலையில், இருநாட்டு தலைவர்கள் நேற்று அளித்த கூட்டு பேட்டியின்போது கியூபா அதிபர் ரவுல் கேஸ்ட்ரோ – ஒபாமா இடையே இறுக்கமான மனநிலையே காணப்பட்டது.

ஒபாமாவின் இந்த பயணம் பெரும்பாலும் முன்னேற்றம் இன்றியே முடிந்ததாக கருத வேண்டிய சூழலில் தலைநகர் ஹவானாவில் இருந்து புறப்படுவதற்கு முன்னர் அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஒபாமா, தனது வருகையின் மூலம் அமெரிக்கா-கியூபா இடையே நிலவிவரும் பகைமையை தீர்த்து கொள்ள முடியும் என நம்புவதாகவும், கியூபா மக்களுக்கு அதிகமாக அரசியல் மட்டும் ஊடக சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக கரும்பு சர்க்கரை பயன்படுத்துவதால் உடலில் உண்டாகும் மாற்றங்கள்…!!
Next post காத்தான்குடியில் காவலாளி சடலமாக மீட்பு..!!