அமெரிக்காவில் 4 வயது சிறுவனை கொதிக்கும் நீரில் நிற்க வைத்து கொன்ற மாற்றாந்தாய்…!!

Read Time:1 Minute, 48 Second

a6fd9b1c-5a95-48f2-ac4a-da0d91c51078_S_secvpfஅமெரிக்காவில் ஒகியோ மாகாணத்தில் உள்ள பிராங்லின் நகரை சேர்ந்த 4 வயது சிறுவன் ஆஸ்டின் டெர்ரக் கூப்பர். இவனது மாற்றாந்தாய் அன்னா ரிட்சி (25).

இவருக்கு ஆஸ்டினை கண்டாலே பிடிக்காது. எனவே அவன் மீது ஏதாவது குற்றம் குறைகளை கூறி தண்டனை அளித்து கொடுமைகள் செய்து வந்தார். சம்பவத்தன்று சிறுவன் ஆஸ்டின் குறும்பு தனம் செய்தான்.

இதனால் ஆத்திரம் அடைந்த அன்னா ரிட்சி சிறுவன் ஆஸ்டினை கொதிக்கும் நீரில் நீண்ட நேரம் நிற்க வைத்தார். இதனால் வலி தாங்காமல் அவன் கதறி அழுது துடித்தான். இருந்தும் அவர் தண்டனையை நிறுத்தவில்லை. தொடர்ந்து கொதிக்கும் நீரில் நிற்க வைத்தார்.

அதன் பின்னர் இரவில் படுக்கையில் கிடத்தி தூங்க வைத்தார். மறுநாள் விடிந்த பிறகும் அவன் எழுந்திருக்கவில்லை. அதை தொடர்ந்து அவனை அங்கிருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் சிறுவன் ஆஸ்டின் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதை தொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் மாற்றாந்தாய் அன்னாரிட்சி கைது செய்யப்பட்டார். இதற்கிடையே சிறுவனின் தந்தையிடமும் விசாரணை நடந்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுவிஸ் ஒன்றியத்தினால், புங்குடுதீவு வல்லன், வீராமலை மாணவ, மாணவியருக்கான பிரயாண ஒழுங்குகள்..! (VIDEO & PHOTOS)
Next post பெண்கள் விடுதியில் லேப்டாப் திருடிய வாலிபர் கைது…!!