கினியாவில் மீண்டும் பரவுகிறது எபோலா வைரஸ்: சிகிச்சை பெற்று வந்த சிறுமி பலி…!!

Read Time:1 Minute, 48 Second

dd28fe8d-2175-467b-96e8-09d4d3b648b7_S_secvpfகினியா நாட்டில் எபோலா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கி உள்ள நிலையில், இந்நோய் பாதிப்பினால் சிறுமி ஒருவர் பலியாகி உள்ளார்.

இதுபற்றி என்ஜெரெகோர் பகுதியில் அமைந்த எபோலா சிகிச்சை மையத்தின் செய்தி தொடர்பு அதிகாரி போட் டாஸ் சில்லா கூறும்போது, அந்த மையத்தில் சிகிச்சைக்காக இளம் சிறுமி ஒருவர் சேர்க்கப்பட்டதாகவும், அவர் மரணமடைந்து விட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு பிப்ரவரி 29ந் தேதியில் இருந்து இதுவரை 4 பேர் இந்த வைரஸ் பாதிப்பினால் மரணமடைந்து உள்ளனர். இதனை அடுத்து சுகாதார பணியாளர்கள் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினரில் வேறு யாருக்கும் இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா? என கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கினியா, சியரா லியோன் மற்றும் லைபீரியா ஆகிய நாடுகளில் எபோலா வைரஸ் தாக்குதலினால் 2013-ம் ஆண்டில் இருந்து இதுவரை 11 ஆயிரத்து 300க்கும் அதிகமானோர் மரணமடைந்து உள்ளனர். கினியா நாட்டில் இந்த வைரஸ் பாதிப்பு தொடங்கியிருக்க கூடும் என நம்பப்படும் நிலையில், இந்த வைரசினால் கடந்த வருடம் டிசம்பர் வரை 2 ஆயிரத்து 500 பேர் வரை பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நியூசிலாந்தில் வினோதம்: உள்ளாடை–காலுறைகள் திருடும் குறும்புகார பூனை…!!
Next post பஸ் கண்ணாடி உடைப்பு: கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது…!!