பிரான்ஸில் புலிகள் இயக்கப் பிரிவினரிடையே மீண்டும் மோதல்!: ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி…!!
பிரான்ஸில் நீண்டகாலமாக இரு புலிகள் இயக்கப் பிரிவினர்களிற்கிடையே நிலவும் சண்டை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதன் வெளிப்பாடாக… நேற்று தமிழர் விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் மாவீரர் உதைபந்தாட்டப் போட்டிகள் ஆரம்பமாக இருந்த வேளையில் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் அவரது வீட்டிற்கு முன்னால் இனம்தெரியாத தமிழர்களால் கடும் தாக்குதலுக்கு இலக்காகி மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு சத்திர சிகிச்கை மேற்கொள்ளப் போவதாக மருத்துவர்கள் தொிவிக்கின்றனர்.
இதே வேளை பிரான்ஸ் தமிழர் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளரும், விளையாட்டு மைதானத்தில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார்.
விளையாட்டு மைதானத்தில் தாக்குதல் மேற்கொண்டவர்கள் பிரான்ஸ் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்சில் உள்ள விளையாட்டுக் கழகங்களில், 21 கழகங்கள் இச்சுற்றுப் போட்டியில் பங்குபற்றியுள்ள நிலையில், அதனைத் தடுத்து நிறுத்தும் முகமாகவே புலிகள் இயக்கத்தின் மற்றொரு பிரிவினர் வன்முறையில் ஈடுபட்டதாக தெரியவருகிறது.
புலிகளின் முள்ளிவாய்க்கால் முடிவுக்கு பின்னர், புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகள் மத்தியிலே சொத்துக்காகவும் (பொதுமக்களிடம் இருந்து சேர்த்த காசு யாருக்கு சொந்தம் என்பதுக்காகவும்), பதவிப் போட்டிக்காகவும் முறுகல் நிலை பகிரங்கமாக காணப்படுவதும், இதன் எதிரொலியாக அடிக்கடி மோதலில் (வன்முறையில்) ஈடுபடுவதும், ஒருவரையொருவர் கொலை செய்யவும் தயங்காது செயல்படுவதும் எல்லோருக்கும் தெரிந்ததே.
குறிப்பாக பிரான்சில் “நெடியவன் அணி”, “விநாயகம் அணி” என்று பிரிந்து செயல்படுவதும் குறிப்பிடத்தக்கது.
மாவீரர்களின் பெயரால் நடாத்தப்படும் இவ் விளையாட்டு போட்டிகளை யார் நடத்துவது? தமிழ் மக்களிடமிருந்து பணத்தை யார் சேகரிப்பது என்கின்ற போட்டா போட்டியின் காரணமாகவே இம்மோதல்கள் நடைபெற்றதாக தெரியவருகின்றது.
நேற்று காலை பிரான்ஸ் வியைளாட்டுத்துறைப் பொறுப்பாளர், இனம்தெரியாதவர்களால் தாக்கப்பட்டு, முதலுதவிப்படையினரால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்,
அவரைப் பார்க்க வைத்தியசாலைக்குச் சென்ற தேசியச் செயற்பாட்டாளர்கள், வைத்தியசாலையின் முன்றலில் வைத்தும், இதே கும்பலால் தாக்கப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதல்களில் ஈடுபட்ட ஒருவரை சற்று முன்னதாகக் பிரான்ஸ் காவற்துறையினரால் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதுவரை பிரான்ஸில் புலிகள் இயக்க உள்முரண்பாட்டில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் இதோ..
**பிரான்சில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலக நிதிப் பொறுப்பாளர் லெப்.கேணல் நாதன், ஊடகவியலாளர் கப்டன் கஜன் ஆகியோர், 26.10.1996 இல் படுகொலை செய்யப்பட்டனர்.
**பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளராக இருந்த கேணல் பருதி மீது கூரிய ஆயுதங்களால் கொலைவெறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
**பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பரப்புரைப் பொறுப்பாளர் திரு மேத்தா என்பவர் மீது, அவரது இல்லத்திற்கு அண்மையில் வைத்து கொலைவெறி தாக்குதல் இடம் பெற்று, அவர் அதிலிருந்து ஒருவாறு மீண்டுள்ளார்.
**இதன் தொடரச்சியாக, பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளராக இருந்த திரு பரமலிங்கம் மீது அவரது வீட்டிற்கு அண்மையில் வைத்து வன்முறையுடன் கூடிய, வாள் வெட்டுக்களும் கொலைமுயற்சியும் மேற்கொள்ளப்பட்டன.
அதிலிருந்து ஒருவாறு உயிர் தப்பியவர் மீது, மீண்டும் அவரது வர்த்தக நிலையத்தில் வைத்து, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
வன்முறையாளர்களின் கொலைவெறி தாக்குதல் சம்பவங்கள் தொடர்கின்றன….
Average Rating