திரிகோணமலையில் இலங்கை இராணுவம் வான்வழித் தாக்குதல்

Read Time:1 Minute, 37 Second

helihapter.jpgஇலங்கையின் வடகிழக்கு மாவட்டமான திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் நிலைகள் என்று அரச படைகளால் சந்தேகப்பட்ட இடங்கள் மீது இலங்கை இராணுவம் வான் வழித் தாக்குதல்களை தொடர்ச்சியாக நடத்தியுள்ளது. இது குறித்து அரசு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிடும் போது மாவிலாறு கால்வாய்க்கு பொறியிலாளர்கள் தங்கு தடையின்றி போய் வருவதை உறுதிப் படுத்தவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறினார்.

விடுதலைப்புலிகள் இந்தக் கால்வாயை வழி மறித்து தடுத்து வருவதால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர் நிலங்களுக்கு நீர் பாசனம் தடுக்கப்பட்டுள்ளது என்று அரசு அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்கள்.

எவரும் காயமடைந்ததாக தகவல்கள் இல்லை. மூன்று தசாப்தங்களாக நடந்து வரும் போரினால் வீடுகளை இழந்தோர்கள் ஒரு புறம், 2004 ல் ஏற்பட்ட சுனாமி பேரழிவினால் வீடுகளை இழந்தவர்கள் மறுபுறம், இவர்களின் தேவைகளை மதிப்பீடு செய்ய அகதிகளுக்கான உயர் ஆணையர் அண்டோனியோ குற்றஸ் அங்கு நேரில் சென்ற சில மணி நேரங்களில் இந்தத் தாக்குதலக்ள் நடைபெற்றுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சீனாவைத் தாக்க வருகிறது சூறாவளி: 4 லட்சம் மக்கள் வெளியேற்றம்
Next post இந்தியப் பெண்ணுக்கு ரூ.25 லட்சம் நஷ்டஈடு இங்கிலாந்து கோர்ட்டு தீர்ப்பு