மசூதியில் குண்டுவெடிப்பு

Read Time:1 Minute, 43 Second

pakisthan1.gifபாகிஸ்தானில் மசூதி ஒன்றில் பக்ரீத் தொழுகை நடைபெற்று கொண்டிருந்தபோது வெடிகுண்டு வெடித்து 54 பேர் பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் உள்ள சார்சடா எனும் நகரில் உள்ள ஷெபாவோ மசூதியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது பக்தர்களோடு கலந்திருந்த மனித வெடிகுண்டு தன்னிடமிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் 54 பேர் பலியானார்கள். 32 பேர் படுகாயமடைந்தனர். இந்த தொழுகையில் அந்நாட்டு அமைச்சர் அப்சாப் ஷெபாவோவும் கலந்து கொண்டார். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் முன்னாள் அமைச்சரும், அவரது மகனும் காயமின்றி தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பெஷாவர் நகரிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பக்ரீத் தொழுகையில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றிருப்பது அந்நாட்டில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில் அண்மை காலமாக மனித வெடிகுண்டுகள் தாக்குதல் அதிகமாக நடைபெற்று வருகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post முன்னாள் தலைமை நீதிபதி எனக்கு எதிராக சதி செய்தார் முஷரப் கூறுகிறார்
Next post மாநில அரசுகளுக்கு மன்மோகன்சிங் யோசனை