வெள்ள நிவாரண பணிகள்: விஜயகாந்த்

Read Time:1 Minute, 51 Second

vijayakan5_14102007.jpgவெள்ள நிவாரண நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு: தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழை காரணமாக உயிர், உடைமைகளை இழந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடலூர், அரியலூர், தஞ்சை மாவட் டங்களில் பயிர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. விருத்தாசலத் தில் ஏரிகள் நிரம்பி வழிவதாலும், கோமுகி அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டதாலும் கிராமங்கள் மட்டும் அல்லாமல் நகர மக்களும் பாதிக்கப் பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் வீடுகளை இழந்தோர், விளை பயிர்களை இழந்தோர் என அனைத்து தரப்பில் உள்ள மக்களையும் கணக்கெடுத்து உடனடி நிவாரண பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். உதவித் தொகை, இலவச அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட் களை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொற்று நோய் பரவாமல் இருக்கும் வகையில் பொது சுகாதார துறையின் மூலம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நிவாரண உதவிகள் கட்சி அடிப்படை யில் பாரபட்சம் காட்டாமல், பாதிக்கப் பட்ட அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அமெரிக்காவில் துணை ஜனாதிபதி அலுவலகத்தில் தீ விபத்து ஆயிரம் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்
Next post வட்டுக்கோட்டையில் ஆயுதபாணிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரு பிள்ளையின் தந்தையார் உயிரிழந்துள்ளார்