இந்த ஜூஸை தினமும் மூன்று டம்ளர் குடித்தால், இதயக் குழாயில் ஏற்படும் அடைப்பைத் தடுக்கலாம்..!!

Read Time:4 Minute, 17 Second

18-1458279772-1-deep-fryஇன்றைய காலத்தில் ஏராளமானோருக்கு இதயத்திலிருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு இரத்தத்தை செலுத்தும் இரத்த குழாயான தமனியில் அடைப்பு ஏற்படுகிறது. இதற்கு நாம் உண்ணும் உணவுகளில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் தான் முதன்மையான காரணம்.

இந்த கொழுப்புக்கள் தமனிகளின் சுவர்களில் மெதுவாக படிய ஆரம்பித்து, நாளடைவில் அடைப்பை ஏற்படுத்தும். இப்படி தமனிகளில் அடைப்பு ஏற்பட்டால், அதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புக்கள் கூட அதிகம் உள்ளது.

எனவே இந்த பெருந்தமனியில் ஏற்படும் அடைப்பைத் தடுக்க ஒவ்வொருவரும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டு, கெட்ட பழக்கங்களைக் கைவிட முயற்சிக்க வேண்டும்.

மேலும் தற்போதைய உணவுப் பொருட்களில் அதிகம் கொழுப்புக்கள் இருப்பதால், தினமும் பெருந்தமனிகளை சுத்தம் செய்யும் ஒரு ஜூஸைக் குடித்து வந்தால், வாழ்நாளின் அளவை நீட்டிக்கலாம்.

எண்ணெயில் பொரித்த உணவுகள்

எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகமான அளவில் உண்பதோடு, தினமும் இம்மாதிரியான உணவுகளை உட்கொண்டு வந்தால், விரைவில் பெருந்தமனி தடிப்பால் அவஸ்தைப்படக்கூடும்.

நீரிழிவு

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இல்லாமல், ஏற்றத்தாழ்வுடன் இருந்தால், அதன் காரணமாகவும், பெருந்தமனிகளில் அடைப்புக்கள் ஏற்படும்.

புகைப்பிடித்தல்

தினமும் புகைப்பிடித்து வருவோருக்கு பெருந்தமனி தடிப்புக்கள் மிகவும் வேகமாக வரும் வாய்ப்புக்கள் உள்ளது. உங்களுக்கு நீண்ட நாட்கள் வாழ ஆசை இருந்தால், முதலில் புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் இருந்தால், பெருந்தமனி தடிப்புக்கள் ஏற்படுவதற்கான அபாயங்கள் அதிகம் உள்து. ஏனெனில் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களின் தமனிகள் கடினமாவதால், பெருந்தமனிகளில் அடைப்புக்கள் வேகமாக ஏற்படும்.

இயற்கை வழிகள்

பெருந்தமனி தடிப்புக்களுக்கு மருத்துவர்கள் போதிய சிகிச்சை அளிப்பார்கள். ஆனால் நாம் உண்ணும் உணவுகளிலும், வாழ்க்கை முறையிலும் சிறு மாற்றங்களைக் கொண்டு வந்தால், பெருந்தமனி தடிப்புக்களில் இருந்து விடுபடலாம்.

உணவுகள் உதவும்

பெருந்தமனிகளில் அடைப்பை ஏற்படுத்துவது கொழுப்புக்கள் தான். எனவே பெருந்தமனியை சுத்தம் செய்யும் உணவுப் பொருட்கள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் பெருந்தமனிகள் சுத்தமாகி, பெருந்தமனி தடிப்பு ஏற்படும் அபாயம் குறையும்.

உணவுப் பொருட்கள் பூண்டு, வெங்காயம், மிளகு, மஞ்சள் தூள், இஞ்சி, க்ரீன் டீ, பார்ஸ்லி, அன்னாசி, பப்பாளி போன்றவை பெருந்தமனிகளில் படிந்துள்ள கொழுப்புக்கள் மற்றும் ப்ளேக்குகளை வெளியேற்றும். ஏனெனில் இந்த உணவுப் பொருட்களில் நோயெதிர்ப்பு அழற்சிப் பொருள் அதிகம் உள்ளது. ஆகவே இவற்றை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் இதய நோய்கள் வரும் அபாயத்தைத் தடுக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞன் கைது…!!
Next post ஆரம்ப பாடசாலை ஆசிரியை கொலை…!!