தூக்குப்போட்டு தற்கொலை: 5 நாட்களாக பிணமாக கிடந்த டிரைவர்…!!

Read Time:1 Minute, 46 Second

6557bd53-9cc0-45f3-a232-6a3455729ca7_S_secvpfவியாசர்பாடி, சாஸ்திரி நகர் 14–வது தெருவில் வசித்து வந்தவர் ஸ்டீபன் (35). கார் டிரைவர்.

இவரது மனைவி குடும்ப தகராறில் பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து ஸ்டீபன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். மாடியில் உள்ள வீட்டில் அவரது பெற்றோர் வசித்து வருகிறார்கள்.

கடந்த 10–ந்தேதி முதல் ஸ்டீபன் பெற்றோர் வீட்டுக்கு வரவில்லை. அவரை உறவினர் தேடாமல் இருந்தனர்.

இந்த நிலையில் பூட்டிக் கிடந்த ஸ்டீபன் வீட்டில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியது. சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் ஸ்டீபன் பிணமாக கிடந்தார். அவர் இறந்து 5 நாட்கள் இருக்கும்.

இதுகுறித்து எம்.கே.பி. நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி கமிஷனர் மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் சுந்தர் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

ஸ்டீபனை தேடி அவரது வீட்டுக்கு யாரும் செல்லாததால் அவர் இறந்தது பற்றி தெரியாமல் இருந்து உள்ளது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈராக்கில் துருக்கி போர் விமானங்கள் ஆவேச தாக்குதல்: 45 குர்திஷ் போராளிகள் பலி…!!
Next post ஒரு மனிதன் எப்போது முழுவளர்ச்சியடைகிறான்?.. இதோ உடலின் அதிசயங்கள் உங்களுக்காக…!!