பாகிஸ்தானில் கனமழைக்கு 50 பேர் பலி: 75 வீடுகள் இடிந்தன…!!

Read Time:1 Minute, 58 Second

e1c29426-af2d-4fa4-b7a1-8fa89b2a6d9b_S_secvpfபாகிஸ்தானில் கடந்த சில தினங்களாகப் பெய்த கனமழைக்கு கிட்டத்தட்ட 50 பேர் பலியாகி உள்ளனர்.

பலூசிஸ்தான் மாகாணத்தில் வியாழக்கிழமை ஆரம்பித்த கோடை மழை, பின்னர் பிற மாகாணங்களுக்கும் பரவி தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர்.

இதுபற்றி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி பலூசிஸ்தானில் 18 பேரும், பழங்குடி பிராந்தியங்களில் 15 பேரும், பஞ்சாப் மாகாணத்தில் 10 பேரும், கைபல் பாக்துன்க்வாவில் 6 பேரும் என மொத்தம் 49 பேர் மழை தொடர்பான விபத்துக்களில் பலியாகி உள்ளனர். 75 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. சில பகுதிகளில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. பஞ்சாப் மாகாணத்தின் தென்பகுதியில் கோதுமை பயிர்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன.

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழை விட்டபோதிலும், இந்த வார மத்தியில் மற்றொரு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் மழைப் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு இதே பகுதிகளில் பெய்த கோடை மழை மற்றும் வெள்ளத்திற்கு 80 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியுமா?: இல்லை என்கிறது புதிய ஆய்வு முடிவு…!!
Next post 37 உயிர்களை பறித்த அங்காரா கார் குண்டு வெடிப்பை அரங்கேற்றிய பெண் தீவிரவாதி…!!