தூத்துக்குடி அருகே இரட்டைக்கொலை: சரண் அடைந்த 3 பேர் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்…!!

Read Time:4 Minute, 21 Second

73a55cc7-65ea-470c-960b-661729656df6_S_secvpfதூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பழையகாயல் ரட்சண்யபுரம் பகுதியில், அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் சுபாஷ் பண்ணையாருக்கு சொந்தமான தென்னந்தோப்பு மற்றும் வாழைத்தோட்டம் உள்ளது. கடந்த 8–ந் தேதி அந்த தென்னந்தோப்பில் தண்ணீர் செல்வதற்கு வசதியாக பாத்தி அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது மதியம் ஒரு கார் மற்றும் 5 மோட்டார் சைக்கிள்களில் சுமார் 15 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். அவர்கள் 3 நாட்டு வெடிகுண்டுகளை தோட்டத்தில் வீசினர். அந்த தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த நெல்லை மாவட்டம் சுரண்டை இடையர்தவனையை சேர்ந்த ஆறுமுகச்சாமியை (வயது 40) தலையை துண்டித்து கொலை செய்தனர். இதேபோன்று பழையகாயலை சேர்ந்த விவசாய தொழிலாளி கண்ணன் (48) என்பவரையும் அந்த கும்பல் வெட்டிக் கொன்றது.

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் ஆறுமுகச்சாமி குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்ததால் அந்த கும்பல் அவரது தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் சுபாஷ் பண்ணையாரை குறிவைத்து தான் இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த இரட்டைக் கொலை வழக்கு தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடியவர்களை தேடினார்கள். இதற்கிடையே நேற்று முன்தினம் இரட்டைக் கொலை தொடர்பாக 11 பேரை போலீசார் பிடித்தனர். மேலும் சிலரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த இரட்டைக் கொலை வழக்கில் நெல்லை தச்சநல்லூர் சத்திரம் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த முருகாண்டி மகன் கண்ணன் என்ற கண்ணபிரான்(36), தச்சநல்லூர் மேலக்கரையை சேர்ந்த மலையரசன் மகன் மணி என்ற மணிகண்டன்(28) மற்றும் ஸ்ரீவைகுண்டம் முறப்பநாடு படுகையூரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முருகன்(24) ஆகிய 3 பேரும் புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் கோர்ட்டு நீதிபதி பாரதிராஜன் முன்னிலையில் நேற்று முன்தினம் சரண் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து நீதிபதி பாரதிராஜன், 3 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர். சரணடைந்த 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க ஆத்தூர் போலீசார் திருச்செந்தூர் கோர்ட்டில் மனு செய்தனர்.

இதையடுத்து திருச்சி சிறையில் இருந்து 3 பேரையும் திருச்செந்தூருக்கு போலீசார் வேனில் இன்று அழைத்து வந்தனர். அவர்களை திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருவள்ளூர் அருகே சிறுவனை கட்டிப்போட்டு 30 பவுன் நகை கொள்ளை…!!
Next post மேலூர் அருகே பஸ் மீது லாரி மோதி விபத்து: வடமாநில பெண்கள் 3 பேர் பலி…!!