கிருஷ்ணா நதியில் 3 1/2 கி.மீ. தூரம் நீந்தி சிறுமி சாதனை

Read Time:1 Minute, 48 Second

திருப்பதியை சேர்ந்தவள் ஆர். நவசக்தி (3 வயது) இவள் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி. படித்து வருகிறாள். இவள் 2 வயதிலேயே நீச்சல் கற்று கொண்டாள். இவளது கண்ணில் ஏரி,குளம், ஆறு ஏதாவது தென்பட்டால் அவ்வளவுதான் பெற்றோரிடம் அதில் நீச்சலடித்து குளிக்கப் போகிறேன் என்று அடம் பிடிப்பாள். இவளது நீச்சல் ஆசையை அறிந்த பெற்றோர் ஊக்கப் படுத்தினார்கள். இதனால் அவள் நதியில் நீண்ட தூரம் நீச்சல் அடிக்க கற்றுக் கொண் டாள். இவளது திறமையை அறிந்த நீச்சல் பயிற்சியாளர் கள் அவளை நதியில் நீண்ட தூரம் நீந்த வைத்து லிம்கா சாதனை படைக்க முடிவு செய்தனர். இதன்படி நேற்று முன்தினம் சிறுமி நவசக்தியை விஜயவாடாவில் ஓடும் கிருஷ்ணா நதிக்கு அழைத்துசென்றனர். அவ ளுக்கு விஜயவாடா மேயர் மல்லிகாமேகம் தட்டிக் கொடுத்து வாழ்த்து தெரிவித் தார். பின்னர் நவசக்தி கிருஷ்ணா நதியில் 3 கி.மீ. தூரம் வேக மாக நீந்தினாள். அவள் நதியில் வேகமாக நீந்தியதைப் பார்த்த பொதுமக்கள் கைதட்டி ஆர வாரம் செய்தனர். அவள் குறுகிய நேரத்திலேயே 3 கி.மீ தூரத்தை கடந்து புதிய சாதனை படைத்தாள். விரைவில் அவளது பெயர் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post டயானா கடிதம் வெளியீடு
Next post மெதுவாக நடந்து வந்ததால் பரபரப்பு: ஐஸ்வர்யாராய் கர்ப்பமா?