அமெரிக்க பெண்ணை ஏமாற்றி ரூ.5 கோடி நிலம் அபகரிப்பு சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் கைது
அமெரிக்க பெண்ணை ஏமாற்றி ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக, சென்னையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது செய்யப்பட்டார். காண்டிராக்டர் ராஜன் சென்னை மேற்கு முகப்பேரில் வசிப்பவர் ராஜன். கட்டிட காண்டிராக்டரான இவர், போலீஸ் கமிஷனர் நாஞ்சில்குமரனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நான் கட்டிடம் கட்டி விற்பனை செய்யும் காண்டிராக்டு தொழில் செய்து வருகிறேன். சென்னை, எண்ணூரில் வசிக்கும் நìல புரோக்கர்கள் ஏழுமலை, விஜி ஆகியோர் என்னை தொடர்பு கொண்டு அம்பத்தூரில் 12 கிரவுண்டு நிலம் ரூ.5 கோடிக்கு விற்பனைக்கு இருப்பதாக கூறினார்கள். இது தொடர்பாக, சென்னை, எண்ணூரில் வசிக்கும் சொர்ணமூர்த்தி (வயது 40) என்பவரை அணுகும்படி தெரிவித்தனர். நான் அவரை சந்தித்து பேசியபோது, குறிப்பிட்ட நிலம் அமெரிக்காவில் வசிக்கும் புனிதம் என்ற பெண்மணிக்கு சொந்தமானது என்றும், அவருக்கு வாரிசுகள் இல்லை என்றும், அந்த நிலத்தை விற்பதற்கு தன்னை பவர் ஏஜெண்டாக நியமித்துள்ளதாகவும் கூறினார். அது தொடர்பான தஸ்தாவேஜ×களையும் காட்டினார். நான் அதை உண்மை என்று நம்பி, நிலத்தை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தேன். ரூ.15 லட்சம் அட்வான்சாக கொடுத்தேன்.
பின்னர், இந்த நிலம் சம்பந்தமாக தாசில்தார் அலுவலகத்தில் விசாரித்தபோது, `அமெரிக்க பெண்மணி புனிதம் தன்னுடைய நிலத்தை விற்க யாரையும் பவர் ஏஜெண்டாக நியமிக்கவில்லை’ என்பது தெரிய வந்தது. எனவே, இதுபற்றி போன் மூலம் புனிதத்தோடு தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது அவர், `நிலத்தை விற்பனை செய்ய சொர்ணமூர்த்தியை பவர் ஏஜெண்டாக நியமிக்கவில்லை என்றும், தனக்கு ஒரு மகனும், மகளும் வாரிசாக இருப்பதாகவும்’ கூறினார். ஏற்கனவே, சொர்ணமூர்த்தியின் மோசடி குறித்து எழும்பூர் போலீசில் அவர் புகார் கொடுத்துள்ளதாகவும் கூறினார். சொர்ணமூர்த்தி போலி ஆவணங்களை தயாரித்து, தன்னுடைய நிலத்தை அபகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மோசடி
போலி சான்றிதழ் மூலம் சொர்ணமூர்த்தி என்னிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்துவிட்டார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்தும்படி சென்னை, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, கமிஷனர் நாஞ்சில்குமரன் உத்தரவிட்டார். இதன்பேரில் கூடுதல் கமிஷனர் ஜாங்கிட், துணை கமிஷனர் தர்மராஜன், உதவி கமிஷனர் சோமசுந்தரம் ஆகியோர் மேற்பார்வையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்கள்.
கைதானார்
மோசடி புகார் கூறப்பட்டுள்ள சொர்ணமூர்த்தி, சென்னையில் ரியஸ் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இதுபோல, போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி வேலைகளில் ஈடுபட்டு வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. இதன்பேரில், சொர்ணமூர்த்தி நேற்று கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.