வவுனியா மாணவி ஹரிஷ்ணவியின் படுகொலையும், கொலைக் குற்றவாளியை தப்பவைக்க முயற்சித்த “லங்காஸ்ரீ” இணையத்தளமும்: அதிர்ச்சித் தகவல்கள்.!!
13வயதுச் சிறுமி ஹரிஷ்ணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திக் கொலை செய்தவர் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் தம்பியான “லங்காஸ்ரீ” இணையத்தளத்தின் (குழுமம்) உரிமையாளர் சிவஞானம் ஸ்ரீகுகனின் நெருங்கிய உறவினர் என்கின்ற நம்பகமான தகவல் கசிந்துள்ளது.
இதனால்..இக்கொலைக் குற்றவாளியை தப்பிக்க வைப்பதற்கும், இக்கொலைச் சம்பவத்தின் உண்மை தன்மையை மூடிமறைப்பதற்கும் பல இட்டுக்கட்டிய செய்திகளை ‘செத்தவீட்டு’ இணையதளமான லங்காஸ்ரீ குழுமங்கள் (தமிழ்வின், ஜேவிபி இணையம்…) வெளியிட்டு மக்களை குழப்பி வருகின்றனர்.
அப்பாவி சிறுமி ஹரிஷ்ணவியின் கொலை வழக்கின் இன்றைய நிலை என்ன?
வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவி கெ.ஹரிஸ்ணவி (வயது 14) கடந்த செவ்வாய்கிழமை (16) தனது வீட்டில் தூக்கில் தொங்கியிருந்த நிலையில் சடலமாக பிற்பகல் 2.15 மணியளவில் மீட்கப்பட்டார்.
தாயார் தொழிலுக்கும் சகோதரர்கள் பாடசாலைக்கும் சென்றிருந்த நிலையில் தனிமையில் இருந்த மாணவி 2.15 மணியளவில் தாயார், சகோதாரர்கள் பாடசாலை முடிந்து வந்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பது அவதானிக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறு மீட்கப்பட்டார்.
இந்நிலையில் வவுனியா பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவினர் மாணவியின் அயல்வீட்டில் வசித்து வந்தவரான 35வயதுடைய பாலசிங்கம் ஜனர்தன் என்ற குடும்பஸ்தரை விசாரணைகளுக்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இத்துடன் இக்கொலைச் சம்பவம் தொடர்பாக எந்தவித தகவல்களும் வெளிவரவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இக்கொலைச் சம்பவம் தொடர்பாக… நாம் அறிந்த நம்பகரமான தகவல்கள் இதோ..
(சிவஞானம் ஸ்ரீகுகன் லங்காஸ்ரீ இணையதள உரிமையாளர்)
தமிழ் மக்கள் மத்தியில் நம்பகத்தன்மை வாய்ந்த ஊடகமாக விளங்குவதாக ‘தங்களை தாங்களே’ பறைசாற்றிக் கொள்ளும் “லங்காஸ்ரீ, தமிழ்வின், ஜேவிபி” இணையத் தளத்தின் உரிமையாளர் சுவிற்சர்லாந்தின் துர்கா மாநகரத்தில் வாழும் சிவஞானம் ஸ்ரீகுகன் ஆவார்.
இவர் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனின் சகோதரன் ஆவார்,
வவுனியாவில் வன்புணர்வின் பின் கழுத்து நெரிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட 13 வயதுப் பாடசாலை மாணவி ஹரிஷ்ணவி விடயத்தில் இவர்கள் நடந்து கொண்ட விதம் இருக்கிறதே… மிகவும் கீழ்த்தரமானதும், அருவருக்கத்த வகையிலும் செய்திகளைப் பிரசுரித்து, குற்றவாளியைத் தப்புவிக்கும் வகையில் தமது கைங்கரியத்தினை இந்த லங்காஸ்ரீ, தமிழ்வின் மற்றும் ஜேவிபி இணையம் மூலம் நிறைவேற்ற முற்பட்டுள்ளார்கள்.
அதுதவிர மரண விசாரணையில் கற்பழிப்புக் கொலை என்று வந்த அறிக்கையினைத் திசைதிருப்பி, மக்கள் மத்தியில் உருவான விழிப்பினை, எழுச்சியினைத் திசை திருப்பும் வகையில் முன்னுக்குப் பின் முரணான செய்திகளை ஆதாரமற்று வெளியிட்ட பெருமை இவ் இணையத்தினையே சாரும்.
மரண விசாரணை அறிக்கை…
இதற்கான காரணம் யாதென்று நாம் அறிய முற்பட்டோம், ஆம் இக் கற்பழிப்புக் கொலையாளி லங்காஸ்ரீ இணையத்தள உரிமையாளர் ஸ்ரீகுகனின் நெருங்கிய உறவினர் என்பது வெளிச்சத்திற்கு வந்தது.
குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சமயம், இவர்கள் வவுனியா மாவட்ட மரண விசாரணை அதிகாரி கிஷோருக்குப் பணம் கொடுத்து, அவரது அறிக்கையினை மாற்றி, கொலையாளியினைத் தப்புவிக்க இவர்கள் எடுத்த முயற்சி வவுனியாப் பொலிஸ் அத்தியட்சகரின் நீதியான செயற்பாட்டினால் முறியடிக்கப்பட்டுள்ளது.
அது தவிர ஹரிஷ்ணவியின் கொலை தொடர்பில் ஆதாரமற்று அவரது தாயார் மீது கொலைப் பழி சுமத்தி, பொய்யான செய்தியினைத் தமிழ் வின் இணையம் பிரசுரித்திருந்தது.
இது தொடர்பில் ஹரிஷ்ணவியின் தந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது, ஸ்ரீகுகன் அவர்கள் மன்னிப்புக் கோரியதோடு, சம்பந்தப்பட்ட செய்தியினை நீக்குவதாகவும் உறுதியளித்திருந்தார்.
பின்னர் அச் செய்தியினை லங்காஸ்ரீ குழுமத்திற்குச் சொந்தமான ஜேவிபி இணையத்தில் பிரசுரித்து மக்கள் மத்தியில் குழப்பத்தினை விளைவிக்கும் செயற்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டார்கள் இந்த லங்காஸ்ரீ இணையத்தினர்.
மீண்டும் ஹரிஷ்ணவியின் உறவினர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் இருந்து தொடர்பு கொண்டு குற்றவாளி கைது செய்யப்பட்டு விட்டதாகவும், இச் செய்தியினை நீக்குமாறும் கேட்கவே… ஸ்ரீகுகன் நீக்குவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இது சிங்கள இணையம் ஒன்றில் வந்த செய்தி என்று சொல்லி, செய்தியினை நீக்க முடியாது என்றும், இன்னும் சில மணி நேரத்தில் தாயார் கொலையாளி என்று தீர்ப்பு வரும் என்றும், அவர் கைது செய்யப்படுவார் என்றும் சூளுரைத்துள்ளார்.
ஆனால்.. குற்றவாளியும், ஸ்ரீகுகனின் ஒன்று விட்ட தம்பியுமான பாலசிங்கம் ஜனார்த்தனனைத் தப்புவிக்க இவர்கள் எடுத்த முயற்சிகள் யாவும் முறியடிக்கப்பட்டுள்ளது.
இனியுமா இந்த லங்காஸ்ரீ ஊடகத்தினை, “நம்பகத்தன்மையான ஊடகம்” என்று நம்பி நாம் ஏமாறப் போகின்றோம்?
ஒரு பொறுப்புள்ள ஊடகத்தின் உரிமையாளர் நடுநிலமை தவறி குற்றவாளியைத் தப்புவிக்குக்கும் வகையில் இப்படியும் செய்தி பகிரலமா? செயற்படலமா?
மேலதிக விபரங்களுக்கு லங்காஸ்ரீ இணையத்தள உரிமையாளர் ஸ்ரீகுகனுடனான ஒலிப்பதிவினைக் கேட்டு நீங்களே முடிவு செய்யுங்கள்.
Puradsifm..https://www.facebook.com/Puradsifm/posts/1083427345011330?__mref=message_bubble)
https://www.facebook.com/1662380557358125/videos/vb.1662380557358125/1679574455638735/?type=2&theater
• ஜேவிபி இணையதளமும், தமிழ்வின் இணையதளமும் ‘இரண்டும்’ ஒன்றில்லையாம்?… எப்படிப்பட்ட பச்சை பொய்யை சொல்லுகிறார் சிவஞானம் ஸ்ரீகுகன் என்பதை கேளுங்கள்… இதிலிருந்து எதை மறைக்க முற்படுகிறார்கள்?
• மாணவி ஹரிஷ்ணயை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திக் கொலை செய்து துாக்கிலிட்டவர் கட்டாயமாக தனியொருவராக இருக்கமுடியாது. இதில் பலபோ் சம்பந்தபட்டு இருப்பதற்கான சாத்தியகூறுகள் தென்படுகின்றன.
• மாணவி ஹரிஷ்ணவியின் படுகொலை குற்றவாளி தண்டிக்கப்படுவரா? நீதி கிடைக்குமா?
• சிங்கள இணையதளம் ஒன்றில் வந்த செய்தியின் அடிப்படையிலேயே தாங்கள் செய்தி போட்டதாக ஸ்ரீகுகன் வீடியோவில் கூறுகிறார்.
அப்படியானால் சிங்கள இணையதளம் போடுகின்ற செய்திகள் யாவும் உண்மையா? (ஆதாரம் இல்லாத இட்டுக்கட்டிய செய்தியொன்றை போட்டுவிட்டு..”சும்மா சிங்கள இணையதளத்தில் வந்தது, ஆங்கில இணையதளத்தில் வந்தது எனக் கூறினால் மக்கள் நம்புவார்கள் என நினைக்கிறார்கள்.)
• பெற்ற பிள்ளையின் பாலியல் படுகொலையில் தாய் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பது மாதிரியான ஒரு பொய்யான செய்தியை ஜேவிபி” இணையதளத்தில் நீங்கள் பார்த்திருப்பிர்கள். (இச்செய்தி இப்பொழுது அகற்றப்பட்டுள்ளது) இது எப்படிப்பட்ட ஒருமோசமான வேலை.
நீண்டகாலமாக லங்காஸ்ரீ குழுமங்கள் (“லங்காஸ்ரீ, தமிழ்வின், ஜேவிபி”) பல பொய்யான செய்திகளை (புனைந்து) எழுதிப் பிரசுரித்து தமிழ் மக்களை குழப்பி குளிர் காய்கின்றனர் என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.
வித்தியா கொலை வழக்கில் படுமோசமான படங்களை ‘ஜேவிபி’ போன்ற இணையத்தளத்தில் வெளிவந்ததை நீங்கள் அறிவீாகள்.
இதன் மூலம் வித்தியாவை உயிருடன் கற்பழித்தவர்களை விட, இறந்த வித்தியாவை மீண்டும், மீண்டும் இவ் இணையதளங்கள் படுமோசமாக கற்பழித்துள்ளார்கள்.
இது நிறுத்தப்பட வேண்டும்.
Average Rating