திருச்செங்கோடு அருகே 4–ம் வகுப்பு மாணவர் அடித்து கொலை: உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு…!!

Read Time:4 Minute, 56 Second

d1c30cf9-35dc-4455-bede-bac128e008d0_S_secvpfதிருச்செங்கோடு அருகே உள்ள கோழிக்கால் நத்தம் என்ற இடத்தை சேர்ந்தவர் பழனிசாமி. கட்டிட தொழிலாளி. இவரது மகன் சூர்யா (வயது 10).

கோழிக்கால்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 29–ந்தேதி பள்ளியில் ஜாமன்ட்ரிபாக்ஸ் காணாமல் போனது தொடர்பாக சூர்யாவுக்கும், மாணவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது..

இதில் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் இருவரும் சூர்யாவை தாக்கினார். படுகாயம் அடைந்த சூர்யாவை ஆசிரியர்கள் மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மாணவன் சேர்க்கப்பட்டான். நேற்று அங்கு சிகிச்சை பலன் இன்றி சூர்யா பரிதாபமாக இறந்தான்.

இது குறித்து சூர்யாவின் தாய் பாப்பாத்தி திருச்செங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரில், கடந்த 3–ந்தேதி எனது மகன் சூரியாவை அவனுடன் படிக்கும் மாணவர்கள் அடித்துள்ளனர். வீட்டிற்கு வந்ததும் இதை எங்களிடம் சொல்லி அழுதான். நாங்கள் சமாதானப்படுத்தி மகனை தூங்க வைத்தோம். இரவில் திடீரென இரவில் ரத்த வாந்தி எடுத்தான்.

உடனே அருகில் உள்ள சங்ககிரி மருத்துவ மனையில் சேர்த்தோம். அங்கு உடல் நிலை மோசமடைந்த தால் 4–ந்தேதி சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். ஆனால் எனது மகனை காப்பாற்ற முடியாமல் போய் விட்டது. உடன் படிக்கும் மாணவர்கள் அடித்ததில் ஏற்பட்ட உள் காயத்தின் காரணமாகத் தான் எனது மகன் சூர்யா இறந்துள்ளான். எனவே சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யாவை தாக்கியதாக கூறப்படும் 2 மாணவர்களை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

பிரேத பரிசோதனையின் முடிவில் தான் சக மாணவர்கள் அடித்ததில் சூர்யா இறந்தானா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற முழுவிபரங்களும் தெரியவரும்.

இந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையின் பிணவறை முன்பாக சூரியாவின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் அமர்ந்திருந்தினர்.

அப்போது மாணவனின் பெற்றோர் கூறுகையில், எங்களது மகன் அரசு பள்ளியில் படித்து வந்துள்ளார். அங்கு வைத்து தான் எங்களது மகனை அடித்துள்ளனர். எனவே அந்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனது மகனை தாக்கிய சக மாணவர்கள் மீது கொலை வழக்கும் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவும் செய்யவேண்டும். உடனடியாக அந்த 2 மாணவர்களையும் கைது செய்ய வேண்டும்.

மகனை இழந்து வாடும் எங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மகன் அரசு பள்ளியில் படித்து, இறந்துள்ளதால் எங்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தியை சந்தித்து பேச உள்ளோம்.

பிரேத பரிசோதனை செய்யும் போது கூடுதலாக டாக்டர்களை நியமித்து பிரேத பரிசோதனை செய்து, அதனை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்.

இந்த கோரிக்கையை ஏற்றால் மட்டுமே மகன் சூர்யாவின் உடலை பெற்று கொள்வோம் என்று கூறினர்.

மதியம் சுமார் 12.45 மணியளவில் நாமக்கல் மாவட்ட கலெக்டரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த சென்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொடைக்கானலில் சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்..!!
Next post விழுப்புரம் ஆசிரமத்தில் இருந்து தப்பிய 3 இளம்பெண்கள் கோவை ரெயில் நிலையத்தில் மீட்பு…!!