கொடைக்கானலில் சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்..!!

Read Time:1 Minute, 54 Second

210f480a-793a-4eb6-aff7-422e31e39454_S_secvpfகொடைக்கானலில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கொடைக்கானல் மலை வனப்பகுதியில் சிறுத்தை, புலி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ளதால் வனப்பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விலங்குகள் தண்ணீர் தேடி தோட்டப்பகுதிகளில் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. கொடைக்கானல் நகருக்குள் காட்டெருமைகள் அடிக்கடி நுழைந்துவிடுகின்றன.

கொடைக்கானல் வில்பட்டி பிலாக்கவை பகுதியில் கடந்த சில தினங்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளது. தோட்டங்களுக்குள் புகுந்த சிறுத்தை நாய்களை தாக்கி கொன்றதால் அப்பகுதிமக்கள் அச்சமடைந்துள்ளனர். சம்பவத்தன்று அங்குள்ள ஒரு கட்டிடத்திற்குள் புகுந்த சிறுத்தை பொதுமக்களை கண்டதும் தப்பி ஓடி மரத்தில் ஏறி உள்ளது.

அவர்கள் சத்தம் போடவே காட்டுப்பகுதிக்குள் ஓடிவிட்டது. இதனால் அப்பகுதி மக்கள் தோட்ட வேலைகளுக்கு செல்ல அச்சப்படுகின்றனர்.

இதுகுறித்து வனத்துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வன அதிகாரி முருகன் உத்தரவின்பேரில் வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று கண்காணித்து வருகின்றனர். சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கராச்சியில் நாசவேலையில் ஈடுபட இருந்த தீவிரவாதிகள் சுட்டுக்கொலை…!!
Next post திருச்செங்கோடு அருகே 4–ம் வகுப்பு மாணவர் அடித்து கொலை: உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு…!!