ஆப்கானிஸ்தான் அரசுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தலிபான் மறுப்பு..!!

Read Time:2 Minute, 12 Second

2c7278bd-0855-4c29-86ab-e70e1679732e_S_secvpfஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படையின் உதவியுடன் தலிபான் ஆட்சி அகற்றப்பட்டு ஜனநாயக முறையில் நடைபெற்ற தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தற்போது ஆட்சி செய்து வருகிறது.

தலிபான் தீவிரவாத அமைப்புக்கும் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் இடையே தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படையினர் ஓரளவிற்கு வெளியேறிய பிறகு தலிபான்களின் தாக்குதல் அதிகரித்து வருகிறது.

இதை கட்டுப்படுத்துவதற்காக தலிபான் குழுவுடன் ஆப்கானிஸ்தான் அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது. பாகிஸ்தான் தலைமையில் ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால், அதில் முடிவு ஏதும் எடுக்கவில்லை.

இந்நிலையில் தற்போது ஆப்கானிஸ்தான் அரசு தலிபான் இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது. ஆனால், இதை தலிபான் தீவிரவாத இயக்கும் ஏற்க மறத்துவிட்டது.

இதுகுறித்து அந்த குழு வெளியிட்டுகள்ள செய்தியில் ‘‘நாங்கள் எங்களுடைய நிலையில் உறுதியாக இருக்கிறோம் என்பதை மீண்டும் ஒருமுறை தெளிவுப்படுத்த விரும்புகிறோம். வெளிநாட்டு படைகள் நாட்டில் இருந்து வெளியேறும் வரை, தலிபான் பெயர் சர்வதேச பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கும் வரை, கைது செய்யப்பட்டுள்ள எங்களது இயக்கத்தில் உள்ளவர்களை விடுவிக்கும் வரை பேச்சுவார்த்தை கிடையாது’’ என்று குறிப்பிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமலாப்பாலின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய வீடியோ…!!
Next post மகா சிவராத்திரி: பருத்தித்துறை – திருக்கேதீஸ்வரம் விசேட பஸ் சேவைகள்..!!