சவுதிஅரேபியாவில் நடுவானில் மாரடைப்பால் விமானி திடீர் மரணம்: சாதுர்யமாக விமானத்தை தரை இறக்கிய துணை விமானி…!!

Read Time:1 Minute, 21 Second

f0053fee-d674-4e66-b85b-62955b173e6b_S_secvpfசவுதி அரேபியாவில் உள்ள ஆசிர் விமான நிலையத்தில் இருந்து ரியாத்தில் உள்ள கிங்கலித் விமான நிலையத்துக்கு ஒரு விமானம் சென்று கொண்டு இருந்தது.

விமானத்தில் 220 பயணிகள் பயணம் செய்தனர். விமானத்தை விமானி வலித் பின் முகமது அல்–முகமது ஓட்டி வந்தார்.

34 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டு இருந்தது. கிங் கலித் விமான நிலையத்தில் தரை இறங்கும்போது விமானத்தை ஓட்டி வந்த விமானி முகமது அல்–முகமதுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.

அடுத்த நொடியில் அவர் மரணம் அடைந்தார். இதனால் விமானம் தடுமாறியது.

இதனை கண்ட துணை விமானி ரமிடென்சுஜி துரிதமாக செயல்பட்டு விமானத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

விமானி இறந்ததை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்த அவர் விமானத்தை சாதுர்யமாக தரை இறக்கினார். அவரது முயற்சியால் 226 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜிம்பாப்வேயில் இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதல்: 30 பயணிகள் பலி…!!
Next post ஆஸ்திரேலியாவில் இனவெறி தலைப்பாகை அணிந்த சீக்கிய சிறுவனுக்கு கத்திக்குத்து…!!